Author Archives: adminn

20.11.2016 – தொல்காப்பியம் காட்டும் வாழ்வியல்

thokaappiyam-1

thokaappiyam-3

thokaappiyam-2

20.11.2016 – தொல்காப்பியம் காட்டும் வாழ்வியல்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
29.01.2017 அன்று நடைபெற்றக் கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 300-ஆவது மாதாந்திரக்
கூட்டம் 29.01.2017 அன்று சங்கத் துணைத் தலைவர் முனைவர்
அமுதா பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு
விருந்தினராக ஓய்வுபெற்ற தமிழாசிரியர் திரு. வெ.சேகர்
அவர்கள் “திருவள்ளுவர் திருநாள் – தமிழர் திருநாள்” என்னும்
தலைப்பில் சிறந்ததொரு உரையாற்றினார். தமிழர் திருநாள்
எவ்வாறு கொண்டாட வேண்டும் என அறிஞர்கள் கூடி முடிவு
செய்ததை நினைவு கூர்ந்தார். தமிழ் ஆண்டுகள் எவ்வாறு
பயன்பாட்டுக்கு வந்தது என்பதை ஆதாரத்துடன் எடுத்து
கூறினார்.
திருவள்ளுவர் காலத்தில் வாழ்ந்த பல புலவர்கள் குறித்தும்,
அவர்கள் இயற்றிய நூல்களைப் பற்றியும் தெளிவாக எடுத்து
கூறினார். அனைவரும் வியக்கத்தக்க வகையில் பல்வேறு
நூல்களில் இருந்து குறிப்புகள் தந்ததை அவையோரின்
பாராட்டுக்களையும் பெற்றார்.
துணைத் தலைவர் தனது முன்னுரையில் சிறப்பு விருந்தினரின்
சிறப்பியல்களை எடுத்தியம்பினார். தமிழர்களின் விழாக்களான
இரு விழாக்களைப் பற்றி தெளிவான தகவல்களை கூறினார்.
முன்னதாக செயலாளர் வரவேற்புரையாற்றினார். முனைவர்
பு.பெ. இராமசாமி அவர்கள் உறுப்பினர்களுக்கு வினா விடை
நிகழ்ச்சியினை வழக்கம்போல் நடத்தினார்.
பின்னர், செயற்குழு உறுப்பினர் கலியமூர்த்தி நன்றி கூற
கூட்டம் நிறைவடைந்தது.

16.10.2016 – வள்ளலாரின் வாழ்வியல் சிந்தனைகள்

161016-2
161016
161016-3

16.10.2016 – வள்ளலாரின் வாழ்வியல் சிந்தனைகள்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
16.10.2016 அன்று நடைபெற்றக் கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 297-ஆவது மாதாந்திரக் கூட்டம் 16.10.2016 அன்று
சங்கத் தலைவர் புலவர் த. இராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு
விருந்தினராக வழக்கறிஞர் பால. சீனிவாசன் அவர்கள் கலந்து கொண்டு “வள்ளலாரின்
வாழ்வியல் சிந்தனைகள்” என்னும் தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார். பிரம்ம
சமாஜம், ஆரிய சமாஜம், இராமகிருஷ்ண சமாஜம், விவேகானந்தர் சமாஜம்
ஆகியவற்றுடன் வள்ளாருக்குள்ள உறவைப் பற்றிய செய்திகளை விளக்கினார். 7 வயது
முதல் 51 வயது வரை 6 திருமுறைகள் வெளியிட்டது பற்றியும் குறிப்பிட்டார்.
இராமலிங்கர் பற்றி சக்திதாசன் என்ற பெயரில் பாரதியார் சுதேசமித்திரன் இதழில்
எழுதியதை குறிப்பிட்டு, இராமானுஜர் கொள்கையான எம்மதமும் சம்மதம் என்ற
கொள்கையை அவர் ஏற்றுக் கொண்டதையும் குறிப்பிட்டார்.
தனது 7-ஆவது வயதில் “தர்மமிகு சென்னை” என்று குறிப்பிட்ட அவர், தனது
34-ஆவது வயதில் தனது நிலையை மாற்றி “சேற்றிலே விழுந்த சென்னை” என்று
குறிப்பிடுகிறார். குறிக்ககோளுக்கும் கொள்கைக்கும் உள்ள வேறுபாடுகள் குறித்து
தெளிவான விளக்கத்தை அளித்தார்.
வினோபாவின் சர்வோதயம், காந்தியின் அகிம்சை, தனது குறிக்கோளான
ஜீவகாருண்யம் குறித்தும் ஜோதி வழிபாட்டு முறைகளைப் பற்றியும் தெளிவாகக்
குறிப்பிட்டார். கல்வி, ஆன்மிகம், உடல் ஆரோக்கியம், இவற்றுடன் அன்புதான்
ஜீவகாருண்ய ஒழுக்கம் என்று கூறினார். பசித்திரு, தனித்திரு, விழித்திரு என்பதை
குறிப்பிட்ட போதும் உண்மை உணர்வு என்பதை விளக்கினார். ஏறத்தாழ ஒரு மணிநேரம்
அவையோரை தன்வயப்படுத்தினார்.
தலைவர் உரையாற்றுகையில், தன்னை மிகவும் கவர்ந்த வள்ளலாரின்
பெருமைகளைக் கூறினதார். வள்ளலாரின் கருத்துக்களை உறுப்பினர்கள் விரும்பினால்,
தான் வகுப்பு எடுக்கவும் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
முன்னதாக அமுதா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி மாணவி நிஷாந்தினி
வள்ளலார் குறித்து 5 மணித்துணிகள் உரையாற்றினார். துணைத்தலைவர் முனைவர்
அமுதா பாலகிருஷ்ணன் அவர்கள் தான் எழுதிய நூல் ஒன்றினை பரிசளித்தார்.
மாணவியைப் பாராட்டி உறுப்பினர்கள் ரொக்கப் பரிசும் அளித்தனர்.
முன்னதாக சங்கச் செயலாளர் துரை. சுந்தரராசன் வரவேற்புரை ஆற்றினார்.
கள்ளக்குறிச்சி தமிழ்ச்சங்கத் தலைவர் கவிஞர் கோமுகிவாசன் அவர்கள் கலந்து கொண்டு
சிறப்பித்தார்.
இணைச் செயலாளர் து.சீ. இராமலிங்கம் நன்றியுரை கூறுவதற்கு முன் முனைவர்
பு.பெ. இராமசாமி அவர்கள் வழக்கம்போல் வினா விடை நிகழ்ச்சியை நடத்தினார்.
பின்னர் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.

25.09.2016 – 20 வைணவ நூல்களின் தொகுப்புகளின் குறுந்தகடு வெளியீட்டு விழா

vainava3
vainava1
vainava2

25.09.2016 – 20 வைணவ நூல்களின் தொகுப்புகளின் குறுந்தகடு வெளியீட்டு விழா

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
16.10.2016 அன்று நடைபெற்றக் கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 297-ஆவது மாதாந்திரக் கூட்டம் 16.10.2016 அன்று
சங்கத் தலைவர் புலவர் த. இராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு
விருந்தினராக வழக்கறிஞர் பால. சீனிவாசன் அவர்கள் கலந்து கொண்டு “வள்ளலாரின்
வாழ்வியல் சிந்தனைகள்” என்னும் தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார். பிரம்ம
சமாஜம், ஆரிய சமாஜம், இராமகிருஷ்ண சமாஜம், விவேகானந்தர் சமாஜம்
ஆகியவற்றுடன் வள்ளாருக்குள்ள உறவைப் பற்றிய செய்திகளை விளக்கினார். 7 வயது
முதல் 51 வயது வரை 6 திருமுறைகள் வெளியிட்டது பற்றியும் குறிப்பிட்டார்.
இராமலிங்கர் பற்றி சக்திதாசன் என்ற பெயரில் பாரதியார் சுதேசமித்திரன் இதழில்
எழுதியதை குறிப்பிட்டு, இராமானுஜர் கொள்கையான எம்மதமும் சம்மதம் என்ற
கொள்கையை அவர் ஏற்றுக் கொண்டதையும் குறிப்பிட்டார்.
தனது 7-ஆவது வயதில் “தர்மமிகு சென்னை” என்று குறிப்பிட்ட அவர், தனது
34-ஆவது வயதில் தனது நிலையை மாற்றி “சேற்றிலே விழுந்த சென்னை” என்று
குறிப்பிடுகிறார். குறிக்ககோளுக்கும் கொள்கைக்கும் உள்ள வேறுபாடுகள் குறித்து
தெளிவான விளக்கத்தை அளித்தார்.
வினோபாவின் சர்வோதயம், காந்தியின் அகிம்சை, தனது குறிக்கோளான
ஜீவகாருண்யம் குறித்தும் ஜோதி வழிபாட்டு முறைகளைப் பற்றியும் தெளிவாகக்
குறிப்பிட்டார். கல்வி, ஆன்மிகம், உடல் ஆரோக்கியம், இவற்றுடன் அன்புதான்
ஜீவகாருண்ய ஒழுக்கம் என்று கூறினார். பசித்திரு, தனித்திரு, விழித்திரு என்பதை
குறிப்பிட்ட போதும் உண்மை உணர்வு என்பதை விளக்கினார். ஏறத்தாழ ஒரு மணிநேரம்
அவையோரை தன்வயப்படுத்தினார்.
தலைவர் உரையாற்றுகையில், தன்னை மிகவும் கவர்ந்த வள்ளலாரின்
பெருமைகளைக் கூறினதார். வள்ளலாரின் கருத்துக்களை உறுப்பினர்கள் விரும்பினால்,
தான் வகுப்பு எடுக்கவும் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
முன்னதாக அமுதா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி மாணவி நிஷாந்தினி
வள்ளலார் குறித்து 5 மணித்துணிகள் உரையாற்றினார். துணைத்தலைவர் முனைவர்
அமுதா பாலகிருஷ்ணன் அவர்கள் தான் எழுதிய நூல் ஒன்றினை பரிசளித்தார்.
மாணவியைப் பாராட்டி உறுப்பினர்கள் ரொக்கப் பரிசும் அளித்தனர்.
முன்னதாக சங்கச் செயலாளர் துரை. சுந்தரராசன் வரவேற்புரை ஆற்றினார்.
கள்ளக்குறிச்சி தமிழ்ச்சங்கத் தலைவர் கவிஞர் கோமுகிவாசன் அவர்கள் கலந்து கொண்டு
சிறப்பித்தார்.
இணைச் செயலாளர் து.சீ. இராமலிங்கம் நன்றியுரை கூறுவதற்கு முன் முனைவர்
பு.பெ. இராமசாமி அவர்கள் வழக்கம்போல் வினா விடை நிகழ்ச்சியை நடத்தினார்.
பின்னர் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.

18.09.16 – பொதுக்குழுக் கூட்டம்

பொதுக்குழுக்  கூட்டம்

பொதுக்குழுக்  கூட்டம்

பொதுக்குழுக்  கூட்டம்

பொதுக்குழுக்  கூட்டம்

18.09.16 – பொதுக்குழுக் கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம்
தலைவர் புலவர் த. இராமலிங்கம் தலைமையில்
18.09.2016 அன்று நடைபெற்றது.

வரவேறபுரை ஆற்றிய தலைவர் தமிழ்ச்சங்கம் இதுவரை ஆற்றிய பணிகளை
உறுப்பினர்களுக்கு விளக்கினார். நமது சங்கம் பல்வேறு பணிகளை செய்ய
நினைத்தாலும் நிதி நெருக்கடி காரணமாக செய்ய முடியாத நிலை உள்ளதாக
கூறினார். உடனடியாக சில உறுப்பினர்கள் தங்களால் இயன்ற அளவு
நன்கொடைகள் அளித்தனர்.
செயலாளர் பேசுகையில் 2015-2016-ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை
மற்றும் 2015 – 2016-ஆம் ஆண்டிற்கான ஆண்டு கணக்குள் ஏறகனவே
உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது எனக் குறிப்பிட்டு அது குறித்து
விளக்கம் தேவை என்றால் தருவதற்கு தயாராக இருப்பதாக கூறினார்.
பின்னர், ஆண்டறிக்கை மற்றும் ஆண்டு கணக்குகள் முறைப்படி
பொதுக்குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 2016-2018-ஆம் ஆண்டின்
தணிக்கையாளராக தற்போதைய தணிக்கையாளர் திரு. சரத்குமார் அவர்களையே
நியமிப்பது என்றும் அவரது ஆண்டு ஊதியம் ரூ.1500 என அளிப்பதற்கு
பொதுக்குழு ஒப்புதல் அளித்தது. கீழ்கண்ட தமிழறிஞர்களை புரவலர்களாக
நியமிக்க பொதுக்குழு ஒப்புதல் அளித்தது.
முனைவர் ஒவை நடராசன், டி.ஆர். இராசு, வே.சு. வேணுகோபாலன்,
முனைவர் பு.பெ. இராமசாமி ஆகியோர்.
பின்னர் 2016-2018-ஆம் ஆண்டிற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை
தேர்தல் ஆணையர் திரு. தர்மன் அவைக்கு அளித்தார்.

தலைவர் புலவர் த. இராமலிங்கம்

துணைத் தலைவர்கள்: அமுதா பாலகிருஷ்ணன், முனைவர்
கிருஷ்ணவேணி அருணாசலம் வி. நாகசுந்தரம் செயலளார் துரை. சுந்தரராசன்

பொருளாளர் தி. ரங்கராஜன்

இணைச் செயலாளர்கள் து.சீ. இராமலிங்கம் சு. பாரததேவி

செயற்குழு அறுப்பினர்கள் :

  1. ஆ.ச. அருள்
  2. வை. குமரேசன்
  3. த. வடிவேலு
  4. ச. கலியமூர்த்தி
  5. கே.எஸ். மலர்மன்னன்
  6. இரா. பூபாலன்
  7. சி. பாலுசாமி
  8. கோ.ஞானப்பிரகாசம்
  9. சி. செயபால்
  10. பீம. பெருமாள்
  11. க. தனப்பால்
  12. இ.ஜே. சுந்தர்
  13. இ. தர்மன்
  14. ஸ்ரீ மதி வெங்கடாசலம்
  15. இரா. செல்லராசு

பின்னர். இன்றைய கூட்டத்திற்கான செலவினை ஏற்றுக் கொள்வதாக திரு.
இராமு அவர்கள் அதற்கான பணத்தை பொருளாளரிடம் அளித்தார். வந்திருந்த
அனைவருக்கும் நன்கொடை அளித்தவர்களுக்கும் ரூ.5,000/- நன்கொடை
அறிவித்த திரு. வே.சு. வேணுகோபால் மற்றும் திரு. இராமு அவர்களுக்கும்
செயலாளர் நன்றி கூற பொதுக்குழுக் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.

21.8.16 – கம்பனின் கவிநயம்

kamban1

kamban2

21.8.16 – கம்பனின் கவிநயம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 21.08.2016 அன்று நடைபெற்ற கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 296-ஆவது மாதாந்திரக் கூட்டம் 21.08.2016 அன்று
துணைத் தலைவர் முனைவர் அமுதா பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு
விருந்தினராக மக்கள் கவிஞர் மாமன்றத் தலைவர் பேரா. முனைவர் ஆ.இ. பாரதராசா
அவர்கள் கலந்து கொண்டு “கம்பனின் கவிநயம்” என்னும் தலைப்பில் சிறப்பாக
உரையாற்றினார். கம்பராமாயணம் மிகப்பெரிய கடலென்றும் தனக்குத் தெரிந்த தகவர்களை கூறுவதாக தெரிவித்தார்.
இராமாயாணம் தொடங்குவதற்கான காரணத்தை கூறி, தொடர்ச்சியாக பல்வேறு
நிகழ்வுகளைக் கூறினார். இடையிடையே கம்ப இராமாயத்தில் இருந்து பல்வேறு பாடல்களை கையாண்டார். இராமன் இராவண யுத்தத்தின் போது நடைபெற்ற நிகழ்ச்சிகளை மிகவும் தத்ரூபமாக சொல்லியது அவையோரை வியப்பில் ஆழ்த்தியது. ஏறத்தாழ ஒரு மணிநேரம்
அவர் ஆற்றிய உரை அவையோரை தன் வயப்படுத்தியது.
முனைவர் அமுதா பாலகிருஷ்ணன் தலைமை உரையில் முனைவர் பாரதராசா அவர்களை
அறிமுகப்படுத்தி கம்பனைப் பற்றி சிறப்பாக உரையாற்றினார். விழாவில் திரு. பாரதராசா அவர்களின் துணைவியார் பேரா. கயல்விழி மற்றும் மதுரை காமராசர் பல்கலைகழக பேரா. முனைவர் ரேணுகாதேவி ஆகியோர் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் பொன்னாடை அணிவித்துப் பாராட்டப்பெற்றனர்.
முன்னதாக சங்கச் செயலாளர் துரை. சுந்தரராசன் வரவேற்புரை ஆற்றினார். திருமதி ஸ்ரீமதி வெங்கடாசலம் இணைச் செயலாளர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவடைந்தது.

17.07.2016 – பாவேந்தரின் புரட்சிப் பார்வை

Paventar1

Paventar2

Paventar3

17.07.2016 – பாவேந்தரின் புரட்சிப் பார்வை

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 17.07.2016 அன்று நடைபெற்ற கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 295-ஆவது மாதாந்திரக் கூட்டம் 17.07.2016 அன்று
தலைவர் புலவர் த. இராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. புலவர் தங்க. ஆறுமுகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு “பாவேந்தரின் புரட்சிப் பார்வை” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். பாவேந்தர் எழுதிய அழகின் சிறப்பு நூலில் இருந்தும் மற்ற நூல்களில் இருந்தும் பல்வேறு கருத்துக்களை எடுத்துக் கூறினார். சமுதாய சீர்திருத்தம், பெண்களி உரிமைகளை பாதுகாத்தல் போன்றவைகளுக்கு பாவேந்தர் ஆற்றிய பங்கு இவைகள் குறித்து விரிவாகவும், விளக்கமாகவும் உரையாற்றினார்.
தலைவர் புலவர் த. இராமலிங்கம் பேசுகையில், கனகசுப்புரத்தினம் என்ற பெயரை
பாரதிதாசன் என்று மாற்றியதைக் குறிப்பிட்டு இந்தச் சமுதாயம் சீர்பட தனது வாழ்நாள்
முழுவதையும் அர்பபணித்தார் என்பதை தெளிவாக கூறினார். பெண் கல்வி, பெண்
விடுதலை, கைம்பெண்கள் மறுமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் குறித்து
பேசினார்.
முன்னதாக சங்கச் செயலாளர் துரை. சுந்தரராசன் வரவேற்புரை ஆற்றினார். செயற்குழு உறுப்பினர் ச. கலியமூர்த்தி நன்றி கூறினார்.

26.06.2016 – ஐம்பெரும் விழா

Imperum Vizha 1

Imperum Vizha 2

Imperum Vizha text

26.06.2016 – ஐம்பெரும் விழா

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 26.06.2016 அன்று “ஐம்பெரும் விழா” நடைபெற்றது.

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் 31-ஆவது ஆண்டு விழா, அகவை 80-ஐ நிறைவு செய்த உறுப்பினர்களுக்ளுப் பாராட்டு, அகவை முதிர்ந்த 3
தமிழறிஞர்களுக்குப் பாராட்டு, விருது, பொற்கிழி வழங்குதல், கவிஞர் அமுதா பாலகிருஷ்ணன் முனைவர் பட்டம் பெற்றமைக்குப் பாராட்டு, பொதுத்
தேர்வில் தமிழ்ப் பாடத்தில் முதலிடம் பெற்ற சென்னைப் பள்ளி மாணவிகளுக்கு சான்றிதழும், ரொக்கப் பரிசும் வழங்கல் ஆகிய “ஐம்பெரும் விழா”
சங்கத் தலைவர் புலவர் த. இராமலிங்கம் அவர்கள் தலைமையில் 26.06.2016 அன்று நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர் மாண்புமிகு நீதியரசர் T.N. வள்ளிநாயகம் அவர்கள் அசுவை 80-ஐ நிறைவு செய்தவர்களைப் பாராட்டிப் பேசினார். அண்ணாநகர்த்
தமிழ்ச் சங்கத்துடன் தனக்குள்ள உறவைப் பற்றிக் குறிப்பிட்டார். ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டு வருவதை சுட்டிக்காட்டி அந்த முயற்சியில் தமிழ் அமைப்புகள் ஈடுபடவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அண்ணாநகர்த் தமிழ்ச்சங்க
உறுப்பினர்களைப் பாராட்டினார்.
தொடர்ந்து அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் முனைவர் கோ, பெரியண்ணன் அவர்கள் அகவை முதிர்ந்த தமிழர்களான சுவிஞர்
ஆலந்தூர் மோகனரங்கன் அவர்களுக்குப் பைந்தமிழ்ப் பாவலர் விருதும், புலவர் இரா.கு. இலக்குவன் அவர்களுக்கு ருறள்நெறிச் செம்மல் விருதும், பெ
சிவசுப்பிரமணியம் அவர்களுக்கு சிவநேயச் செம்மல் விருதும் வழங்கி தலா 3000 ரூபாய் ரொக்கப் பரிகம் வழங்கி அவர்களை பாராட்டினார்.
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் செயல்பாட்டினைக் குறித்து வெகுவாக பாராட்டினார். தமிழ்ச்சங்கங்களின் வளர்ச்சிக்கு அரசு பல்வேறு உதவிகளைச்
செய்து வருவதை எடுத்துச் சொல்லி அவைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறி அதற்கு தானும் உதவிட தயாராக இருப்பதாகவும்
குறிப்பிட்டார்.
சென்னைப் பல்கலைக்கழக தேர்வு ஆணையர் முனைவர் எஸ். திருமகன் அவர்கள் முனைவர் பட்டம் பெற்ற அமுதா பாலகிருஷ்ணன் அவர்களை
பாராட்டினார். தான் தமிழாசிரியராக தொடங்கி படிப்படியாக முன்னேறி தற்போது பல கல்லூரிகளுக்கு தேர்வு நடத்தும் அளவுக்கு உயர்ந்தது தமிழால்
மட்டுமே எனக் குறிப்பிட்டார். உலகில் பேச்சு வழக்கில் உள்ள மொழிகளில் தமிழ் 17-ஆவது இடத்தில் உள்ளது என்று பெருமிதத்தோடு கூறினார்.
தலைவர் அவர்கள் பேசுகையில் தமிழ்ச்சங்கத்தின் 30 ஆண்டு கால சாதனைகளை விரிவாக எடுத்துரைத்தார். விழாவில் கலந்து கொண்ட அனைத்து
விருந்தினர்களைக் குறித்து தனித்தனியாக குறிப்பிட்டு அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
திரு. தங்க காமராஜ் மேலும் பேசுகையில் அண்ணாநகர் என்றாலே நினைவுக்கு வருவது அண்ணாநகர் டவர் தான் நினைவுக்கு வரும். ஆனால்
இன்றைக்கு நினைவிற்கு வருவது அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கம் மட்டும் தான். இச் சங்கத்தை மையப்படுத்தி மற்ற தமிழ்ச்சங்கங்களை ஈரக்க வேண்டும்
எனக் கேட்டுக் கொண்டார்.
நிறைவாகப் பேசிய தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் தங்க, காமராஜ் அவர்கள், இந்த சான்றிதழும், ரொக்கப் பரிசும் கொடுப்பதற்கு சென்னைப்
பள்ளியைத் தேர்ந்தெடுத்த தமிழ்ச்சங்க நிர்வாகிகளைப் பாராட்டினார். கல்விக்காகவும் குறிப்பாகத் தமிழ் வளர்ச்சிக்காக அரசு செய்து வரும் சாதனைகளை
விரிவாக எடுத்துச் சொன்னார். வருங்கால இளைஞர்கள் தமிழ் படித்து வளரவேண்டும் என்று குறிப்பிட்டார். அண்மையில் பரோடா நகருக்கு செல்லும்
வாய்ப்பு கிடைத்தது என்றும், அங்கு பரோடோ வங்கி மேலாளர் வங்கி மேலாளர் வங்கி விளம்பரத்திற்காக 25 லட்சம் ரூபாய் செலவில் 4 இடங்களில்
விளம்பரப் பலகை வைக்கச் சொல்லி இருந்தாலும், ஒருசில நாட்களில் அவர் மாறுதல் செய்யப்பட்டு, அந்த இடத்தில் தமிழ்நாட்டின் குக் கிராமத்தில்
இருந்து ஒருவர் சேர்ந்துள்ளார், அவர் அந்த விளம்பர பலகை வைக்கும் ஆணையை ரத்து செய்து பதிலாக 2 ஆம்புலன்சு வண்டிகட்ள வாங்கி அதன்
இரண்டு பக்கங்களிலும் பரோடா வங்கிமின் விளம்பரங்களை எழுதி ஊர் முழுவதும் சுற்றிவரச் செய்துள்ளார். இதுதான் தமிழனுக்குக் கிடைத்த பெருமை
எனக் கூறினார். இவ்வாறு தமிழின் பெருமையை எடுத்து இயம்பினார்.
பின்னர் மாணவிகளுக்குப் பரிசுகள் மற்றும் சான்றிதழை வழங்கினார். மாணவிகளுக்கு சுரா பதிப்பகம் சார்பில் திருமதி பாரதிதேவி அவர்களால் நூல்கள்
வழங்கப்பட்டன. விருது பெற்றோர் சார்பில் கவிஞர் மோகனரங்கன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
முன்னதாக சங்கத்தின் செயலாளர் துரை. சுந்தரராசன் அனைவரையும் வரவேற்று பேசினார். பொருளாளர் திரு. ரெங்கராஜன் விழா சிறப்பாக நடைபெற
நன்கொடை அளித்த அனைவருக்கும் மற்றும் உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்தார். நண்பகல் உணவிற்குப் பின் நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன.

29.5.2016 – பாவேந்தரின் பாட்டுத் திறன்

photos92.jpg photos93.jpg photos94.jpg photos95.jpg photos96.jpg

29-5-16-img1

29.5.2016 – பாவேந்தரின் பாட்டுத் திறன்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 29.05.2016 அன்று நடைபெற்ற கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 293-ஆவது கூட்டம் 29.05.2016 அன்று தலைவர் புலவர்
த. இராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. பாவேந்தரின் பாட்டுத்திறன் என்னும்
தலைப்பில் சிறந்ததொரு தலைமை உரையாற்றினார்.
தொடர்ந்து பேசிய சிறப்பு விருந்தினர் திரு. எ. மணிவாசகன் அவர்கள் பாவேந்தரின்
பல்வேறு சிறப்புகளை எடுத்துக் கூறி அவையோரை தன் கட்டுபாட்டுக்குள் கொண்டு
வந்தார். பாவேந்தரின் பன்முகத் திறமைகள் இதுவரை எவரும் சொல்லாததை சொல்லி
அவையோரை வியப்பில் ஆழ்த்தினார். முன்னதாக நமது சங்க உறுப்பினரும்,
வில்லைவாக்கம் உலக வாழ்வியல் நெறிச் சங்க நிறுவனர் அரிமா. திரு. சி.எஸ். அரங்கநாதன் அவர்கள் மறைந்தது குறித்து செயலாளர் கொண்டு வந்த இரங்கல் தீர்மானத்தை அவை ஏற்று
2 மணித்துளிகள் அமைதி காத்தனர்.
பொருளாளர் நன்றி கூற கூட்டம் நிறைவடைந்தது.

26.03.2016 – “முக்கூடல்” நூல் வெளியீட்டு விழா

photos87.jpg

photos88.jpg photos89.jpg photos90.jpg photos91.jpg

mukkudal-nool

26.03.2016 – “முக்கூடல்” நூல் வெளியீட்டு விழா

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 26.03.2016 அன்று
நடைபெற்ற கூட்டத்தில்

பேராசிரியர் முனைவர் வா.மு.சே. ஆண்டவர் எழுதிய
“முக்கூடல்” நூல் வெளியீட்டு விழா
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் பேராசிரியர் முனைவர் வா.மு.சே. ஆண்டவர் எழுதிய
“முக்கூடல்” ஆய்வு நூல் வெளியீட்டு விழா சங்கத்தலைவர் புலவர் த. இராமலிங்கம் தலைமையில்
26.03.2016 அன்று நடைபெற்றது.
தொடக்க உரை ஆற்றிய செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன துணைத் தலைவர் பேரா.
முனைவர் பு. பிரகாசம் அவர்கள் நூலாசிரியர் ஆண்டவர் அவர்களைப் பற்றி பெருமையுடன் பேசி,
அவருடைய தமிழ்ப் பற்றிணை வெகுவாக புகழ்ந்தார். அவர் எழுதிய “முக்கூடல்” ஆய்வு நூல் மிகச்
சிறப்பாக உள்ளது எனப் பெருமையுடன் பாராட்டினார்.
தொடர்ந்து பேசிய பேரா. முனைவர் மறைலை இலக்குவனார் அவர்கள் தனது வாழ்த்துரையில்
ஆண்டவர் அவர்களைப் பற்றியும் அவர் எழுதிய “முக்கூடல்” ஆய்வு நூல் குறித்தும் தனக்கே உரிய
பாணியில் பாராட்டி இன்று பிறந்தாள் காணும் ஆண்டவர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து
வாழ்த்தினார்.
தலைமை உரையாற்றிய புலவர் த. இராமலிங்கம் அவர்கள் வா.மு.சே. ஆண்டவர் அவர்களை
பற்றியும் அவர் குடும்பத்தாருடன் தனக்குள்ள உறவைப் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறி ஆண்டவர்
இது போன்று பல நூல்களை படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
திரு. வா.மு. சேதுராமன் அவர்கள் பேசுகையில் தன் குடும்பம் ஒரு தமிழ்க் குடும்பம் என்றும் தனது
பிள்ளைகள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்க வேண்டும் என்று தனது மனைவியின் ஆசை என்று
நாத்தழுதழுக்க கூறினார். ஆண்டவரும், திருவள்ளுவரும் தமிழ் தழைக்கப் பாடுபடுவதை
நெகிழ்வோடு கூறினார்.
தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழக இயக்குனர் பேரா. முருகன் அவர்கள் ஆண்டவரிடம் தான்
கொண்ட பாசம், நட்பு இவைகள் குறித்து சிறப்பாக உரையாற்றினார்.
நூலினை ஆய்வு செய்த பாரதி பாசறை நிறுவனர் முனைவர் மா.கி. இரமணன் பல்வேறு
கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். இந்த நூலை “இலக்கணவியல்” “இலக்கியவியல்” “அயலகத்
தமிழாய்வு” என மூன்று பகுதிகளாக ஆய்வு செய்துள்ள ஆண்டவர் அவர்களைப் பாராட்டினார்.
தமிழ்ப்பணி ஆசிரியர் திருவள்ளுவர் அவர்கள் “முக்கூடல்” ஆய்வு நூல் எழுதிய தனது இளவல்
முத்துராமலிங்க ஆண்டவர் அவர்களை பெருமளவு பாராட்டிப் பேசினார். நூல் எழுதுவதும் கவிதை
படைப்பதும் தங்கள் குடும்பத்திற்ப் புதிதல்ல என்று கூறினார்.
சோகா இகேதா மகளிர் கல்லூரி தலைவர் டாக்டர் சேது குமணன் அவர்கள் நூலாசிரியர் ஆண்டவர்
குறித்து வெகுவாக பாராட்டினார்.
சிறப்புரை ஆற்றிய பி.டி.லீ. செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை தலைவரும், சென்னை
உயர்நீதிமன்ற நீதியரசர் சு.இராஜேஸ்வரன் அவர்கள் நூலை படித்த போது தனது தந்தை
உ. சுப்பிரமணியம் அவர்களை நினைவு கூர்ந்து அவரும் ஒரு தமிழறிஞர் எனவும் அவர்
நூற்றுக்கணக்கான நூல்களை சேர்த்து வைத்து இருந்ததாகவும், தான் வேறு துறையில் கவனம் செலுத்த
வேண்டி இருந்ததால், அவ்வளவு நூல்களையும் அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு கொடுத்து
விட்டதாக தெரிவித்தார். மிகவும் அருமையான கருத்துக்களை உள்ளடக்கிய “முக்கூடல்” ஆய்வு நூல்
சமைத்த ஆண்டவர் அவர்களைப் பாராட்டினார்.
முன்னதாக சங்கத்தின் செயலாளர் அரிமா துரை. சுந்தரராசன் வரவேற்புரை ஆற்றினார். அரிமாத.கு.
திவாகரன் அவர்கள் நன்றி கூறினார். பச்சையப்பன் கல்லூரி மாணவர் திரு. சோமு நிகழ்ச்சியினை
சிறப்பாக தொகுத்து வழங்கினார். நண்பகல் உணவிற்குப் பின் விழா நிறைவடைந்தது.

20.3.2016 – தொல்காப்பியம் ஒரு புதிய பார்வை

photos83.jpg photos84.jpg photos85.jpg photos86.jpg

Tolkappiyam-oru-putiya-parvai

20.3.2016 – தொல்காப்பியம் ஒரு புதிய பார்வை

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 20.03.2016 அன்று நடைபெற்ற கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 260-ஆவது கூட்டம் சங்கத் தலைவர் புலவர் த. இராமலிங்கம் அவர்கள் தலைமையில் 20.03.2016 அன்று நடைபெற்றது. தமிழ்ச்சங்கத்தின் மேனாள் செயலாளர் முனைவர் வள்ளியம்மாள் கணவரும், பொறியியல் அறிஞருமான திரு. சொ.அ.லா. கணேசன் அவர்கள்
“தொல்காப்பியம் ஒரு புதிய பார்வை” என்னும் தலைப்பில் உரையாற்றினார்.
தலைமை உரையாற்றிய தலைவர் தொல்காப்பியத்தின் பல்வேறு சிறப்பியல்புகளைப் பற்றியும்,nதமிழ் மொழி எவ்வளவு தொன்மை வாய்ந்தது எனவும் அவையோருக்கு எடுத்துரைத்தார். சிறப்பு சொற்பொழிவாளர் பேசுகையில் தான் ஒரு பொறியாளராக இருந்தாலும், தமிழின் மீதுள்ள பற்றின் காரணமாகவும், ஆர்வத்தின் காரணமாகவும் இந்தப் பொருளை எடுத்து ஆய்வுகள் செய்ததாகவும் கூறினார். இந்த ஆய்வுகள் குறித்து மொழியும் தரமும் என்ற தலைப்பில் 9 நூல்களை வெளியிட்டுள்ளதை அறிவித்து அனைத்துக் கருத்துக்களையும் அந்த நூல்களில் ஆய்ந்து இருப்பதாகவும் தெளிவாக எடுத்துரைத்தார். ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு இடம், ஒவ்வொன்றும் அதனதன் இடத்தில் இருக்க வேண்டும், அந்தந்த இடத்தில் இல்லாமல் போவது வேறுபாடு ஆகிறது.
அந்த வேறுபாடு இருக்கின்ற காலத்தில் நாம் அதை அறிந்து அந்தக் குறைகளை நீக்கப்
பாடுபடவேண்டும் என்று அவையோரை கேட்டுக் கொண்டார். அவையோர் எழுப்பிய அனைத்து வினாக்களுக்கும் தக்க பதிலளித்து அவையோரை வியப்பில் ஆழ்த்தினார்.
முன்னதாக சங்கச் செயலாளர் துரை. சுந்ததர்ராஜன் வரவேற்புரை ஆற்றினார், இணைச் செயலாளர் ஞானப்பிரகாசம் நன்றி கூற கூட்டம் நிறைவடைந்தது.