Author Archives: adminn

21.02.2016 – உலகத் தாய்மொழி நாள் விழா

photos81.JPG photos82.JPG photos80.JPG

உலகத் தாய்மொழி நாள் விழா

21.02.2016 – உலகத் தாய்மொழி நாள் விழா

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 21.02.2016 அன்று நடைபெற்ற கூட்டத்தில்
‘உலகத் தாய்மொழி நாள் விழா’ கொண்டாடப்பட்டது

சங்கத் தலைவர் புலவர் த. இராமலிங்கம் அவர்கள் பேசுகையில் தமிழ்மொழியின் சிறப்புகள் குறித்து விரிவாக பேசி, தமிழை வளர்ப்பதற்கு பாரதியார் கூறியதை நினைவு கூர்ந்தார்.
இறவாத புகழுடைய புதிய நூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும், பிற நாட்டு நல்லறிஞர்கள் சாத்திரங்கள் தமிழில் மொழி பெயர்த்து இயற்றல் வேண்டும். சென்றிடூவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவையும் கொணர்ந்து சேர்ப்பீர் எனக்கூறி தற்போது, 100 நாடுகளில் தமிழர்கள் வாழ்ந்தாலும் அவர்கள் தமிழில்
பேச மாட்டார்கள் 40 நாடுகளில் தான் பேசுகிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.
சிறப்பு விருந்தினர் கலைமாமணி கவிஞர் ஏர்வாடி எஸ். இராதகிருஷ்ணன் அவர்கள் பேசுகையில் பல்வேறு கருத்துக்களைக் கூறினார். பங்களாதேசத்தில் 4 மாணவர்கள் தங்கள் தாய்மொழியில் கற்க வேண்டும் என்று சொன்ன காரணத்தினால் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்றும் அந்த நாள் தான் உலகத் தாய்மொழி நாளாக கொண்டாடுவதற்கு வித்திடப்பட்டது என்பதை நினைவூட்டினார். உலகத்தில் 6700 மொழிகள் இருந்ததாகவும் தற்பொழுது 3500 மொழிகள்தான்பேச்சு வழக்கில் உள்ளதாகத் தெரிவித்தார். உலக நாடுகள் அவை (யுனஸ்கோ) 07.11.1999 அன்று அவரவர் தாய்மொழியை ‘உலகத் தாய்மொழி நாளாக கொண்டாட வேண்டும் என்று அறிவிப்பை வெளியிட்டது.
85 மொழிகளுக்கு தமிழ் ஊற்று மொழியாக உள்ளது என்றும் குறிப்பிட்டார். மேலும், வேற்று கிரகத்தில் என்ன மொழி பேசப்படும் என்பதை அறிய 7 மொழிகள் தேர்வு செய்யப்பட்டதில் அதில் தமிழ் மொழியும் ஒன்று என்ற
தகவலையும் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் ஆங்கிலம் பேசுவதாக சொல்வது தவறு என்று சொல்லி 160 நாடுகளில் 6 சதவிகிதம் பேர்கள் மட்டும் தான் ஆங்கிலம் பேசுவதாக தெரிவிததார். அவர் இந்தியன் வங்கியில் பணியாற்றிய போது தமிழ் பயன் படுத்துவதில் ஏற்பட்ட சிரமங்களைப் பகிர்ந்து கொண்டார்.
முன்னதாக சங்கச் செயலாளர் துரை. சுந்ததர்ராஜன் வரவேற்புரை ஆற்றினார், இணைச் செயலாளர்
ஞானப்பிரகாசம் நன்றி கூற கூட்டம் நிறைவடைந்தது.

20.12.1015 – வெளிநாட்டு சுற்றுலா அனுபவங்கள்

Photo64.jpg Photo65.jpg Photo66.jpg Photo67.jpg

Aவெளிநாட்டு சுற்றுலா அனுபவங்கள்

20.12.1015 – வெளிநாட்டு சுற்றுலா அனுபவங்கள்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 20.12.2015 அன்று நடைபெற்ற கூட்டத்தில்
“வெளிநாட்டு சுற்றுலா அனுபவங்கள்” என்னும் பொருள் பற்றி
திருமதி பத்மினி பட்டாபிராமன் அவர்கள் உரையாற்றினார்.

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் கூட்டம் சங்கத் துணைத் தலைவர் புலவர் அமுதா பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. எழுத்தாளரும், உரத்தசிந்தனை அமைப்பின் துணைத் தலைவருமான திருமதி பத்மினி பட்டாபிராமன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தனது வெளி நாட்டு சுற்றுப் பயணங்களைப் பற்றி சிறப்புரையாற்றினார். தான் சென்று வந்த நாடுகளான கென்யா, தான்சானியா, நேபாளம், எகிப்து, வாட்டிகன் சிட்டி, ஜெர்மனி, துபாய், மஸ்கட், பெல்ஜியம், ஹாங்காங், பாரீஸ் ஆகிய நாடுகளைப் பற்றியும் அங்கு வாழும் மக்கள் அவர்களின் வாழ்க்கை முறை, உணவுப்பழக்க வழக்கங்களை போன்ற பல தகவல்களை கூறினார். 2 ஆண்டுகள் மொரிஷியஸ் நாட்டில் இருந்ததையும் சுவைபட கூறினார். அவையோர் கேட்ட அனைத்து சந்தேகங்களையும் தெளிவுபடுத்தினார். அவையோரும் தாங்களே அந்த நாடுகளுக்கு சென்று வந்ததைப்போல உணர்வதாக கூறினார்.
தலைவர் அமுதா பாலகிருஷ்ணன் பேசுகையில், சிறப்பு விருந்தினரை சிறப்பாக ,தன் குடும்பத்திற்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் உள்ள உறவைப்பற்றி நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்.
முன்னதாக வரவேற்புரையாற்றிய செயலாளர் துரை. சுந்ததராஜலு நமது சங்க உறுப்பினர்களான திரு. பா. ஸ்ரீனிவாஸ் அவர்களும் அவரது மனைவி திருமதி. சங்கராந்தி அவர்களும் அண்மையில் பெய்த பெருமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி அகால மரணமடைந்த செய்தியை மிகுந்த வேதனையுடன் அறிவித்தார். அவையோர் அனவைரும் எழுந்து நின்று இரங்கல்தெரிவித்தனர். இவர்களது மறைவு தமிழ்ச்சங்கத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று கூறி, நமது
சங்கச் செய்திகள் உலகளாவிய அளவில் செல்ல இணையதளம் உருவாக்கித் தந்தவர் திரு. ஸ்ரீனிவாஸ் அவர்கள் தான் என்று கூறினார்.

29-11-2015 – முருகன் அல்லது அழகு

Photo60.jpg Photo61.jpg Photo62.jpg Photo63.jpg

முருகன் அல்லது அழகு

29-11-2015 – முருகன் அல்லது அழகு

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 29.11.2015 அன்று நடைபெற்ற கூட்டத்தில்
“முருகன் அல்லது அழகு” என்னும் பொருள் பற்றி
புலவர் தமிழமுதன் அவர்கள் உரையாற்றினார்.

திரு.வி.க. அவர்களின் ‘முருகன் அல்லது அழகு” என்ற நூலை மையமாக வைத்து புலவர் தமிழமுதன் உரையாற்றினார். மணம், இளமை, கடவுள் தன்மை, ஆகிய நான்கு பொருளுடைய ஒரு சொல் ‘முருகு’ என்ற ஒரு சொல். முருகை முருகு உடையவன் முருகு என்றும், முருகன் காலம் கடந்த தமிழர் கடவுள் என்றும், முருகன் என்ற பெயர் அனைத்து மதக்கடவுளுக்கும் பொதுப்பெயர் என்றும் விளக்கினார்.
மணம், இளமை, கடவுள் தன்மை ஆகிய மூன்றும் அழகு என்ற ஒன்றில் அடங்கும். அந்த அழகு இயற்கையில் உள்ளது. இயற்கைதான் முருகன், முருகன்தான் இயற்கை என்பதை விரிவாக எடுத்துக் கூறினார். இயற்கையில் உள்ள அழகை உணர்ந்து முருகனை அடைய புலன் தூய்மை வேண்டும் என்பதை விரிவாக விளக்கினார். அழகில் எவ்வாறு தோய்தல் வேண்டும் என்பதை எல்லாம் பாரதிதாசன் பாடல்கள் துணை கொண்டு விளக்கினார். அடுத்து மணம், இளமை, கடவுள் தன்மை, அழகு ஆகிய நான்கும் பெண்மையில் உண்டு என்றும், பெண்ணுக்கும் பெண்மைக்கும் மிக அழகாக
விளக்கினார். தெய்வ அழகாகிய பெண்மையைப் போற்றி, இல்லறத்தில் ஈடுபட்டு விரதம் இருந்து முருகனை அடையும் வழி முறைகளைக் கூறினார். இயற்கை அழகில் மனம் செல்ல வில்லை, இல்லற வாழ்விலும் ஈடுபட முடியவில்லை என்றால், ஓவியம், இசை, இலக்கியம் இவற்றில் ஒன்றைப் பற்றித் தன்னை மறந்த நிலையில் தோய்ந்தும் முருகனை அடையலாம் என்று திரு.வி.க. அவர்கள் நூலில் உள்ள கருத்துகளை எளிய நடையில் விளக்கினார்.

18-10-2015 பெரியார் – அண்ணா பிறந்தநாள் விழா

anna01.jpg anna02.jpg anna03.jpg anna04.jpg

மேலும் அறிய…. (.pdf)

18-10-2015 பெரியார் – அண்ணா பிறந்தநாள் விழா

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 18.10.2015 அன்று நடைபெற்ற
பெரியார் – அண்ணா பிறந்த நாள், சி.பா. ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது பெற்ற
பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் அவர்களுக்குப் பாராட்டு

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற பெரியார் – அண்ணா பிறந்த நாள் விழா மற்றும் சி.பா. ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது பெற்ற பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் அவர்களுக்குப் பாராட்டு விழா நிகழ்ச்சிகள் 18,10.2015 அன்று நடைபெற்றன. சங்கத் தலைவர் புலவர் த. இராமலிங்கம் தமது
தலைமை உரையில் பெரியார், அண்ணா ஆகியோரைப் பற்றி பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தார். முனைவர் மறைமலை இலக்குவனார் அவரகள் திரு. வா.மு. சேதுராமன் அவர்களைப் பற்றியும் தமிழ் மொழி வாழவும், வளர்ச்சியடையவும் எத்தகைய போராட்டங்களையும் சந்திக்கத் தயாராக இருப்பதை சுட்டிக்காட்டி
அவரைப் பாராட்ட தகுதி பெற்றளவர்கள் இருவர் என்றும் அதில் ஒருவர் முத்தமிழ்க் காவலர் சி.ஆ.பெ. விஸ்வநாதன், மற்றவர் மொழிப் போராளி இலக்குவனார் ஆகியோர் அவர்கள் இங்கு வருவதற்கு வாய்ப்பு இல்லாததால் அவர்களது வாரிசுகளான மணிமேகலை கண்ணனும், மறைமலை இலக்குவனாரும் பாராட்டுவது சாலப் பொருத்தமானது என்று பலத்த கரவொலிக்கிடையே கூறியது அவையோரை
மகிழ்ச்சியில் ஆழ்த்தியது அவரைத் தொடர்ந்து வா.மு.சே. அவர்களைப் பாராட்டிப் பேசிய முன்னாள் மேயர் சா. கணேசன் அவர்களும், த.கு. திவாகரன் அவர்களும் அவருடைய பன்முக குணங்களை எடுத்துக் காட்டி அவர் இந்த வயதிலும் ஏறத்தாழ 136 நாடுகள் பயணம் செய்து தமிழ்மொழியைப் பரப்பி வருவதையும் குறிப்பிட்டனர்.
பெங்களுருத் தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர் திரு. முத்துச் செல்வன் பேசுகையில் கர்நாடகாவில் இத்தகைய மொழிப் பிரச்சினையில் கன்னட தமிழ்ச்சங்கத்தினர் தெரிவிக்கும் கருத்துக்களை கர்நாடக அரசு செவிமெடுத்துக் கேட்கும் என்றும் அந்த நிலை தமிழ்கத்தில் இல்லை என்று ஆதங்கத்தோடு தெரிவித்தார்.
பின்னர் பேசிய சிறப்பு விருந்தினர் மேனாள் அமைச்சர் வேழவேந்தன் அவர்கள் பெரியாரைப் பற்றியும் அண்ணாவைப் பற்றியும் அறிய பல தகவல்களை அவையில் தெரிவித்தார். பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கை அண்ணா அவர்கள் தமிழ்நாடு என பெயர் மாற்றம், சட்டமன்றத்தில் வடமொழி சொற்களை நீக்கி தமிழ் சொற்களை அறிமுகம் செய்தது. சட்டமன்றத்தில் திருக்குறளை சொல்லி அவையை துவங்க
அப்போதைய பேரவைத் தலைவர் சி.பா. ஆதித்தனாருடன் இணைந்து நடைமுறைப்படுத்தியது போன்ற பல விவரங்களை தெரிவித்தார்.
ஏற்புரை வழங்கிய திரு. சேதுராமன் அவர்கள் தமிழை உலகெங்கும் பரப்புவது தனது தலையாய கடமை என்று கூறினார். தமிழனாக இருப்பவர் தமிழ் மொழியியைத் தவிர வேறு மொழியில் பேசுவதைக் கேட்டால் தமக்கு அளவற்ற கோபம் வருமென்றும் அவரை கண்டிப்பதோடு மட்டுமல்ல அடிக்கவும் செய்வேன் என்று
கூறியது, அவர் தமிழ் மீது கொண்டுள்ள பற்றினை வெளிப்படுத்தியது. கவிதை சரளமாக எழுதும் ஆற்றலை
இறைவன் தமக்களித்துள்ளான் எனக் குறிப்பிட்ட அவர் தன் வாழ்நாளிலேயே தாம் துவங்கியுள்ள குடிலைக் கட்டி முடிப்பதே தமது குறிக்கோள் என்றும் அதற்கு திருவள்ளுவனைப் போன்ற தம்பிமார்களின் ஒத்துழைப்பு இருந்தால் போதும் என்று உணர்ச்சி பொங்க உரையாற்றினார்.
முன்னதாக செயலாளர் துரை. சுந்ததராசன் வரவேற்புரை ஆற்றினார் தமிழ் அமைப்புகளுக்கு வேறு
மாநிலங்களைச் சேர்ந்த அமைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டி அது போன்று தமிழகத்தில் இயங்கி வரும் தமிழ் அமைப்புகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். நிறைவாக சங்கப் பொருளாளர் தி. ரங்கராஜன் நன்றி கூற விழா நிறைவடைந்தது.

16-08-2015 – விடுதலையும் வாழ்க்கையும்

images-1.jpg images-2.jpg images-3.jpg

மேலும் அறிய…. (.pdf)

16-08-2015 – விடுதலையும் வாழ்க்கையும்

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கக் கூட்டம் 16.08.2015 அன்று சங்கத் தலைவர் புலவர் த. இராமலிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக கவிஞர் ஜெயபாஸ்கரன் கலந்து கொண்டு “விடுதலையும் வாழ்க்கையும்” என்னும் தலைப்பில் புதிய கோணத்தில்
தனது உரையை நிகழ்த்தினார். இன்னும் விடுதலைப் பெறாமல் இருக்கும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் நிலங்கள்
இன்னும் விடுதலை பெறவில்லை என்றும், நாட்டையே அழித்து வந்த வேலிக்காத்தான் முட்செடிக்கு விடுதலை கொடுக்க 15 ஆண்டுகள்
ஆயின என்று தெரிவித்தார். அடுத்ததாக, முற் காலங்களில் நமது முன்னோர்கள் வைத்த ஊர்களின் பெயர்கள் தற்போது எவ்வாறு உருமாறி
சிதைந்து போயுள்ளதை வேதனையுடன் குறிப்பிட்டார். கல்வியைப் பற்றி குறிப்பிடுகையில் கல்வி அரசிடமும், தனியாரிடமும் சிக்கிச்
சீரழிந்து திரிசங்கு நிலையில் இருப்பதாக கூறினார். தற்போதைய நிர்வாகம் சீர் குலைந்து இருப்பதை ஆதங்கத்தோடு குறிப்பிட்டு
இவைகள் சீர்படுத்தப்பட்டால்தான் நாடு உண்மையியே விடுதலை பெற்றதாக அர்த்தம் என்று சுமார் ஒன்றரை மணிநேரம் எழுச்சியுடன்
உரையாற்றி தான் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதையும் அறிவித்தார். தலைவர் தனது உரையில் ஊராட்சி
ஒன்றிய துவக்கப்பள்ளியில் தமிழ் வழியில் படித்து எந்தவித பின்புலமும் இன்றி தனது சொந்த உழைப்பால் உயர்ந்த அவரை வெகுவாகப்
பாராட்டி இந்தத் தலைப்பில் இப்படியும் பேசலாம் எனப் பேசிய அவரை வானளாவப் புகழ்ந்தார். சிறப்பு அழைப்பாளராகக் கூட்டத்தில்
கலந்து கொண்ட கலைமாமணி ஏர்வாடி இராதாகிருஷ்ணனுக்கு கவிஞர் ஜெயபாஸ்கரனை அறிமுகம் செய்தமைக்கு நெஞ்சார நன்றி
தெரிவித்தார்.
கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புச் செய்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திரு. தனவேல் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்
திரு. ஜெயபாஸ்கரின் உரை சிறப்பாக அமைந்துள்ளது எனப் பாராட்டினார். மேலும் இந்தக் கூட்டம் மூத்த குடிமக்கள் நிறைந்த அவையாக
உள்ளதென்றும், இவர் கூறிய கருத்துக்கள் இளைஞர்களைச் சென்று அடைய வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தினார்.
அவையோர் எழுப்பிய அனைத்து வினாக்களுக்கும் விடையளித்தார். பின்னர் செயலாளர் நன்றி கூறக் கூட்டம் நிறைவடைந்தது.

19-07-2015 – வள்ளலாரின் வாழ்வியல் சிந்தனைகள்

image01.png  image03.png image02.png

 மேலும் அறிய…. (.pdf)

19-07-2015 – வள்ளலாரின் வாழ்வியல் சிந்தனைகள்

அற்புதமான
குரலில் பாடி அவையோரை மகிழ்வித்தார். செயலாளர் தனது வரவேற்புரையில் அண்மையில் உடல்
நலக்குறைவால் மறைந்த செயற்குழு உறுப்பினர் இரா. செயகுமார் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் தலைவர்
தலைமையுரையில் வள்ளலாரைப் பற்றி சிறப்பானதொரு உரையாற்றி சிறப்பு விருந்தினர் முனைவர் பானுமதி அவர்களை
அறிமுகம் செய்து அவருடைய சிறப்பியல்புகளை எடுத்துக் கூறினார். பின்னர் சிறப்பு விருந்தினரும், வள்ளியம்மாள் பெண்கள்
கல்லூரி தமிழ்ப் பேராசிரியருமான முனைவர் பானுமதி அவர்கள் வள்ளலாரின் பல்வேறு குணங்களைப் பற்றி தெளிவாக கூறி,
அவருடைய கொள்கையான பசித்திரு, தனித்திரு, விழித்திரு என்பதைக் குறித்து விரிவாகவும் விளக்கமாகவும் கூறி, அவரது
எளிமை, உணவுப் பழக்கம் போன்றகைளைத் தெளிவாக கூறினார். நிறைவாக உறுப்பினர்கள் எழுப்பிய அனைத்து
வினாக்களுக்கும் விளக்கத்தை அளித்தார். பின்னர் செயலாளர் நன்றி கூற கூட்டம் நிறைவடைந்தது.

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 19.07.2015 அன்று சங்கத் தலைவர் புலவர் த. இராலிங்கம் தலைமையில் கூட்டம்
நடைபெற்றது. முன்னதாக அமெரிக்காவிலிருந்து வந்த மாணவன் பிரணவ் மற்றும் சம்கீதா ஆகிய குழந்தைகள் அழகு தமிழில்
தமிழ்த்தாய் வாழ்த்தினை சிறப்பாகப் பாடினர். அடுத்து முகில் மயூரி என்ற மாணவி வள்ளலார் குறித்து இரு பாடல்களை தனது

பாவேந்தர் பாரதிதாசன் 125-ஆவது பிறந்தநாள் விழா

photo56.jpg     photo57.jpg

 

 

 

1.  அண்ணாநகர் தமிழ் சங்கத்தின் 17.05.2015 அன்று, நடைபெற்ற கூட்டத்தில் புலவர் த. இராமலிங்கம் அவர்கள், சிறப்பு விருந்தினரான அந்தமான் கல்வி துறை இணை இயக்குநராக பணியாற்றி ஓய்வுபெற்ற டாக்டர் எம். அய்யாராஜு அவர்களை பற்றி சிறந்த உரையாற்றினர்.
2.  அண்ணாநகர் தமிழ் சங்கத்தின் 21.06.2015 அன்று பாவேந்தர் பாரதிதாசன் 125-ஆவது பிறந்தநாள் விழா மற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

மேலும் அறிய…. (.pdf)

பாவேந்தர் பாரதிதாசன் 125-ஆவது பிறந்தநாள் விழா

1.  அண்ணாநகர் தமிழ் சங்கத்தின் 17.05.2015 அன்று, நடைபெற்ற கூட்டத்தில் புலவர் த. இராமலிங்கம் அவர்கள், சிறப்பு விருந்தினரான அந்தமான் கல்வி துறை இணை இயக்குநராக பணியாற்றி ஓய்வுபெற்ற டாக்டர் எம். அய்யாராஜு அவர்களை பற்றி சிறந்த உரையாற்றினர்.
2.  அண்ணாநகர் தமிழ் சங்கத்தின் 21.06.2015 அன்று பாவேந்தர் பாரதிதாசன் 125-ஆவது பிறந்தநாள் விழா மற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் 17.05.2015 அன்று நடைபெற்ற கூட்டத்திற்கு
தலைமையேற்று பேசிய தலைவர் புலவர் த. இராலிங்கம் அவர்கள், சிறப்பு
விருந்தினரான அந்தமான் கல்வித் துறையில் இணை இயக்குநராக பணியாற்றி
ஓய்வுபெற்ற டாக்டர். எம். அய்யாராஜு அவர்களைப் பற்றி சிறந்ததொரு அறிமுக
உரையாற்றினார். தொடர்ந்து பேசிய டாக்டர் எம். அய்யாராஜு அவர்கள் “அந்தமான்
தீவுகள் குறித்தும் அதனை சுற்றியுள்ள பல்வேறு தீவுகளை பற்றியும் தெளிவாகவும்,
ஆதாரபூர்வமான செய்திகளை விளக்கப் படங்களுடன் சிறந்ததொரு
உரையாற்றினார். இதுவரை கேள்விபடாத செய்திகள் அந்தமான் – நிக்கோபார்
தீவுகளுக்கு அப்பெயர்கள் எவ்வாறு வந்தன என்று விளக்கினார். முதலில்
டச்சுக்காரர்கள், பின்னர் ஆங்கிலேயர்களாலும் தங்கள் அதிகாரத்தின் கீழ் கொண்டு
வந்ததையும் குறிப்பிட்டு காட்டினார். போர்ட் பிளேர் பகுதி தவிர மற்ற பகுதிகள்
இன்னும் கற்கால வாழ்க்கைதான் மக்கள் வாழ்கிறார்கள் என்பதையும் எடுத்துக் கூறி
அங்குள்ள கலாச்சாரம், அங்குள்ள அரசியல் போன்றவைகளை தெளிவாக விளக்கி
தனது 35 ஆண்டுகள் பணியாற்றிய அரசு பணியின் அனுபவங்களை பகிர்ந்து
கொண்டார். முன்னதாக செயலாளர் துரை. சுந்தரராஜுலு அவர்கள் வரவேற்புரை
ஆற்றினார். அந்தமான் குறித்து தான் ஆய்வு செய்து எழுதிய இரண்டு நூல்களை
தமிழ்ச் சங்கத்திற்கு நன்கொடையாக டாக்டர் எம். அய்யாராஜு அவர்கள்
வழங்கினார். துணைத் தலைவர் அமுதா பாலகிருஷ்ணன் நன்றி நவில கூட்டம்
நிறைவடைந்தது.

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 21.06.2015 அன்று நடைபெற்ற
“பாவேந்தர் பாரதிதாசன் 125-ஆவது பிறந்த நாள் விழாவும்” “அகவை
முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு விருதும், பொற்கிழியும் வழங்கும் விழாவும்”
வெகு சிறப்பாக நடைபெற்றது. சங்கத் தலைவர் புலவர் த. இராமலிங்கம்
அவர்கள் தலைமை வகித்தார். கலைமாமணி பொன்னடியான் அவர்கள்
பாவேந்தர் பாரதிதாசனுடன் தனக்குள்ள தொடர்பு குறித்து பல்வேறு
நிகழ்ச்சிகளைத் தொகுத்துக் கூறினார். அவருடைய அருமை பெருமைகளை
எடுத்துக் கூறி அவருடைய அணுக்கத் தொண்டனாக இன்றும் தொடர்ந்து
பணியாற்றி வருவதாகவும் கூறினார். தனது முல்லைச்சரம் இதழ் மூலம்
பாவேந்தரின் புகழினைப் பரப்பி வருவதாகவும் உணர்ச்சி பொங்க
உரையாற்றினார். அகவை முதிர்ந்த தமிழறிஞர்களான திருவாளர்கள் அரிமா
அரங்கநாதன் அவர்களுக்கு “திருக்குறள் செம்மல்” விருதும், “முகம்”
மாமணி அவர்களுக்கு “இதழியல் வித்தகர்” விருதும், முத்தமிழ் மணி மு. மணி
அவர்களுக்கு “கவிச்செல்வர்” விருதும் வழங்கப்பட்டன. பொற்கிழியாக தலா
ரூபாய் மூவாயிரம் வழங்கப்பட்டது. விருது வழங்கிச் சிறப்புரையாற்றிய
முனைவர் மறைமலை இலக்குவனார் அவர்கள் விருது பெற்றவர்களின்
சிறப்பியல்புகளைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். பாவேந்தர் குறித்த பல
தகவல்களைக் கூறிய அவர் பாவேந்தரின் படைப்புகள் குறித்து விரிவாக ஒரு
ஆய்வாளரைப் போல விரிவுரையாற்றினார். பாரதிதாசன் குறித்த கவிதைகளை
கவிமாமணி முனைவர் குமரிச் செழியன் அவர்களும், கவிஞர் து.சீ.
இராமலிங்கம் அவர்களும் இனியாக படைத்தனர். முன்னதாக சங்கத்தின்
செயலாளர் துரை. சுந்தர்ராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார். பொருளாளர்
ரங்கராஜன் நன்றி கூற விழா இனிதே நிறைவடைந்தது.

தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு முனைவர் மு.வ. -வின் பங்கு

photo51.jpg PHOTO52.jpg photo53.jpg

1. 15.03.2015 அன்று நடைபெற்ற கூட்டத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் திரு. கவியழகன் அவர்களுக்கு தலைவர் புலவர் த. இராமலிங்கம் பொன்னாடை அணிவித்தார்.

2.  15.03.2015 அன்று நடைபெற்ற கூட்டத்தில் டி. ஆர் . இராசு அவர்கள் முப்பதாயிரம் ரூபாய் காசோலை தலைவரிடம் கொடுத்து தான் ஏற்கனவே வாக்களித்தப்படி ஒரு இலட்சம் ரூபாய் நன்கொடையை சங்கத்திற்கு அளித்தார்.

3. 15.03.2015 அன்று நடைபெற்ற கூட்டத்தில் உலக திருக்குறள் வாழ்வியல் மையத்தில் அண்ணாநகர் தமிழ்ச்சங்க செயலாளர் துரை. சுந்தரராஜலு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மேலும் அறிய…. (.pdf)

தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு முனைவர் மு.வ. -வின் பங்கு

1. 15.03.2015 அன்று நடைபெற்ற கூட்டத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் திரு. கவியழகன் அவர்களுக்கு தலைவர் புலவர் த. இராமலிங்கம் பொன்னாடை அணிவித்தார்.

2.  15.03.2015 அன்று நடைபெற்ற கூட்டத்தில் டி. ஆர் . இராசு அவர்கள் முப்பதாயிரம் ரூபாய் காசோலை தலைவரிடம் கொடுத்து தான் ஏற்கனவே வாக்களித்தப்படி ஒரு இலட்சம் ரூபாய் நன்கொடையை சங்கத்திற்கு அளித்தார்.

3. 15.03.2015 அன்று நடைபெற்ற கூட்டத்தில் உலக திருக்குறள் வாழ்வியல் மையத்தில் அண்ணாநகர் தமிழ்ச்சங்க செயலாளர் துரை. சுந்தரராஜலு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் புலவர்
த. இராமலிங்கம் தலைமையில் 19.04.2015 அன்று
நடைபெற்றக் கூட்டத்தில் கலந்து கொண்ட சிறப்பு
விருந்தினர் திரு. கவியழகன் அவர்கள், தமிழ் இலக்கியத்திற்கு
டாக்டர் மு.வ. அவர்கள் ஆற்றிய பங்கு என்னம் தலைப்பில்
அரியதொரு உரையாற்றினார். 32 ஆண்டுகள் ஆசிரியராகப்
பணியாற்றி வரும் இவர் மு.வ. அவர்களைப் பற்றி பல்வேறு
தகவல்களை எடுத்துச் சொல்லி அவருடைய இலக்கியங்கள்
புதினங்கள் கடிதங்கள் ஆகியவற்றை முழுவதுமாக ஆய்வு
செய்து ஒரு ஆராய்ச்சி மாணவனைப் போல தெளிவாக
உரையாற்றினார். மு.வ. அவர்கள் எழுதும் போது அவரை எந்த
தமிழறிஞர்களும் ஆதரிக்கவில்லை என்று கூறியது
அவையோரை வியக்க வைத்தது. பின்னர் அவர் எழுதிய சில
நூல்களைப் பற்றி எடுத்துச் சொல்லி அந்த நூல்களின்
சிறப்புக்களை தெளிவாக விளக்கினார். அவையோரும் மிகவும்
ஆர்வத்துடன் கேட்டு ரசித்தனர். மு.வ. என்ற இரு எழுத்துக்கள்
முனைவர் மு.வ. அவர்களைக் குறிப்பது மட்டுமல்ல,
முன்னேற்றத்தின் வழிகாட்டி என்று கூறி தன் உரையை
நிறைவு செய்தார். முன்னதாக சங்கத் தலைவர் புலவர் த.
இராமலிங்கம் மு.வ. அவர்களோடு தனக்குள்ள தொடர்பு
குறித்தும் அவர் எழுதிய நூல்கள் குறித்தும் தெளிவாக எடுத்து
கூறினார். சங்கத்தின் மூத்த உறுப்பினர் திரு. டி.ஆர். இராசு
அவர்கள் தமிழ்ச்சங்க அறக்கட்டளைக்கு ரூபாய் 30
ஆயிரத்துக்கான காசோலையை தலைவரிடம் வழங்கி தான்
வாக்களித்தவாறு ஒரு லட்சத்தை நிறைவு செய்தார்.
முன்னதாக செயலார் துரை. சுந்தரராஜுலு வரவேற்புரை ஆற்ற
காயத்ரி ரங்கராஜன் நன்றி கூறினார்.

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்க செயலாளர் துரை, சுந்தரராஜலு
அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். உலக
திருக்குறள் வாழ்வியல் மையத்தின் விதிமுறைப்படி 2015 – 2016
ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளை பதவியில் அமர்த்தும்
நிகழ்ச்சியை துரை. சுந்தரராஜலு அவர்கள் நடத்தி வைத்தார்.
தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய பொறுப்புகளுக்கு
முறையே திருவாளர்கள் சந்திரசேகரன், இராம. முருகேசு, கவிஞர்
எழிலன் ஆகியோர்களை அவரவர் பொறுப்புகளில் பதவிப்
பிரமாணம் செய்து வைத்தார். முன்னதாக திருக்குறள் பிரேமாவதி
அவர்கள் மடிஇன்மை அதிகாரம் குறித்து உரையாற்றினார். புதிதாக
பதவியேற்ற நிர்வாகிகளைப் பாராட்டி திருவாளர்கள் அரங்கநாதன்,
கவிமாமணி குமரிச்செழியன் ஆகியோர் உரையாற்றினார். நண்பகல்
உணவிற்குப் பின் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.

உலக திருக்குறள் வாழ்வியல் மையத்தின் கூட்டத்தில்

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் மண்ணுக்கும் உயிர் உண்டு உரையாடல்

photo48.jpg photo49.jpg photo50.jpg

1. 15.03.2015 அன்று நடைபெற்ற கூட்டத்தில் மண்ணுக்கும் உயிர் உண்டு என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றிய கோவை வேளான் பல்கலைக்கழக முன்னாள் முதல்வர் டாக்டர் பு.பெ. இராமசாமி அவருக்கு தலைவர் புலவர் த. இராமலிங்கம் பொன்னாடை அணிவித்தார்.

2. 15.03.2015 அன்று நடைபெற்ற கூட்டத்தில் கவிமாமணி குமரிச்செழியன் அவர் பிறந்த நாளையொட்டி செயலாளர் துரை. சுந்தரராஜலு அவர்கள் பொன்னாடை அணிவித்தார்.

மேலும் அறிய…. (.pdf)

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் மண்ணுக்கும் உயிர் உண்டு உரையாடல்

1. 15.03.2015 அன்று நடைபெற்ற கூட்டத்தில் மண்ணுக்கும் உயிர் உண்டு என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றிய கோவை வேளான் பல்கலைக்கழக முன்னாள் முதல்வர் டாக்டர் பு.பெ. இராமசாமி அவருக்கு தலைவர் புலவர் த. இராமலிங்கம் பொன்னாடை அணிவித்தார்.

2. 15.03.2015 அன்று நடைபெற்ற கூட்டத்தில் கவிமாமணி குமரிச்செழியன் அவர் பிறந்த நாளையொட்டி செயலாளர் துரை. சுந்தரராஜலு அவர்கள் பொன்னாடை அணிவித்தார்.

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் உலகத் தாய்மொழி நாள் விழா

photo46.jpg

photo47.jpg

15.02.2015 அன்று உலகத் தாய்மொழி நாள் விழா மற்றும் இலக்கியத்தில் ஐங்குறுநூறு விழா நடைபெற்றது பொருளாளர் தி. ரங்கராஜன், இணைச் செயலாளர் ஸ்ரீமதி வெங்கடாசலம், முனைவர் ஜே. திரிபுரகூடாமணி, அமுதா பாலகிருஷ்ணன், துரை. சுந்தராஜலு, துணைத் தலைவர் வி. நாகசுந்தரம்.

மேலும் அறிய…. (.pdf)

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் உலகத் தாய்மொழி நாள் விழா

15.02.2015 அன்று உலகத் தாய்மொழி நாள் விழா மற்றும் இலக்கியத்தில் ஐங்குறுநூறு விழா நடைபெற்றது பொருளாளர் தி. ரங்கராஜன், இணைச் செயலாளர் ஸ்ரீமதி வெங்கடாசலம், முனைவர் ஜே. திரிபுரகூடாமணி, அமுதா பாலகிருஷ்ணன், துரை. சுந்தராஜலு, துணைத் தலைவர் வி. நாகசுந்தரம்.