

27.02.2022-அன்று நடைபெற்ற 372-வது கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
27.02.2022 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்
அண்ணநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 372-ஆவது இணையவழிக் கூட்டம்
27.02.2022 ஆம் நாள் ஞாயிறு காலை 10.30 மணிக்கு புலவர்
த.இராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
அரிமா முனைவர் த.கு. திவாகரன் தொடக்க உரை ஆற்றினார்.
செயலாளர் துரை. சுந்தரராஜூலு வரவேற்புரை ஆற்றினார். J.A.L. கணேசன்,
முகம்மாமணி இராமலிங்கம், சிவ சுப்பிரமணியம் ஆகியோரது மறைவிற்கு
ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டு சில மணித்துளிகள் மௌன அஞ்சலி
செலுத்தப்பட்டது. புலவர் த. இராமலிங்கனார் தலைமை உரை ஆற்றினார்.
சொற்சுவை அரசி இலக்கிய மாமணி பேரா. முனைவர் க. ரேவதி (M.A. Ph.D.,
DSS, PGDJMC, DCA, Dip. in Hindi) அவர்கள் “உலகத் தாய் மொழி நாள் விழா”
என்னும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவாற்றினார்கள்.
சொற்பொழிவின் சில பகுதிகள் : கிழக்கு பாகிஸ்தான் மேற்குப் பாகிஸ்தான்
இடையே மொழிப் போர் ஏற்பட்டது. 1956-ல் பாகிஸ்தானின் ஆட்சி மொழிகளில்
ஒன்றாக வங்கமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த மொழிப்போர் வங்கதேசம்
என்ற தனி நாடு உருவாக வழி வகுத்தது. அதன் பின்னணியில் தான்
தாய்மொழியின் தனிச்சிறப்பை உணர்த்தும் வகையில் பன்னாட்டு அமைப்பான
ஐ.நா. சபை வங்கதேசத்தின் மொழிப்போர் தொடங்கிய பிப்ரவரி 21-ஐ உலகத்
தாய் மொழி நாளாக ஆண்டுதோறும் கொண்டாட வேண்டும் என தீர்மானம்
நிறைவேற்றியது. பின்னர் ஐக்கிய நாடுகள் அவை தனது உறுப்பு நாடுகள்
இதனைக் கொண்டாட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியது. உலகத் தாய்
மொழி நாள் கொண்டாடப்படும் வரலாறு இதுவே ஆகும். மனிதன் இருந்தால்
மொழி வளரும்; மனிதன் இறந்தால் மொழி அழியும். மனிதக் கூட்டம் மொழி
வளர்ச்சிக்கு உதவி வருகின்றன.
புலவர் த. இராமலிங்கனார், துரை. சுந்தரராஜுலு, ராம் லக்ஷ்மன் (France)
தமிழ்ப் பண்பாட்டுச் சங்கம், இரா. தண்பாணி, மோதிலால் பாபு, வடசென்னைத்தமிழ்க் கழகம், இளங்கோ வன்னிய பெருமாள், முயற்சி முருகேசன்,
மணிமகலை, புலவர் விஜயலட்சுமி, கவிஞர் மறத்தமிழன் ஆகியோர் முனைவர்
க. ரேவதியைப்பாராட்டியும் வாழ்த்தியும் பேசினர்.
முனைவர் க.ரேவதி அவர்கள் ஏற்புரை வழங்கினார்.
பேரா. பு.பெ. இராமசாமி அவர்களின் கண்டு சொல் வென்று செல் நிகழ்ச்சி
நடைபெற்றது.
பொருளாளர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.
