17.09.2017 – 20-ஆவது பொதுக்குழு கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 20-ஆவது
பொதுக்குழு கூட்டம் 17.09.2017 அன்று நடைபெற்றது
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 20-ஆவது பொதுக்குழு
கூட்டம் 17.09.2017 அன்று நடைபெற்றது. தலைவர் புலவர் த.
இராமலிங்கம் வரவேற்புரை ஆற்றினார்.
2017 – 2018 (31.03.2017 முடிய) ஆம் ஆண்டிற்கான
ஆண்டறிக்கை செயலாளரால் அவைக்கு அளிக்கப்பட்டு, இ.
தர்மன் முன்மொழிய புலவர் தங்க. ஆறுமுகன் வழிமொழிய,
பொதுக்குழுவார் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
பொருளாளரால் அளிக்கப்பட்ட 31.03.2017 முடிய தணிக்கை
செய்யப்பட்ட வரவு செலவு மற்றும் ஐந்தொகைக் கணக்குகளை
வி. நாகசுந்தரம் முன்மொழிய, கோ. ஞானப்பிரகாசம் வழிமொழிய
ஆண்டு கணக்குகள் பொதுக்குழுவால் ஒரு மனதாக
ஏற்றுக்கொள்ளப்பட்டது.
2017-2018 ஆண்டுக்கான தணிக்கையாளராக தற்போதைய
தணிக்கையாளர் திரு. சரத்குமார் அவர்களை மீண்டும் நியமிப்பது
என்றும் அவரது ஆண்டு ஊதியம் ரூபாய் 1,500 -லிருந்து ரூபாய்
2000-ஆக உயர்த்த பொதுக்குழு ஒப்புதல் அளித்தது.
இ. தர்மன் முன்மொழிய சி. செயபால் வழிமொழிய தீர்மானம்
நிறைவேறியது.
தமிழ்ச்சங்கத்திற்கு ஒரு இலட்சம் ரூபாய் நன்கொடை அளித்த
திரு. சேதுபாஸ்கரா மேல்நிலைப்பள்ளி தாளாளர் திரு. சேது
குமணன் அவர்களுக்கு பொதுக்குழு நன்றி தெரிவித்தது. பின்னர்
சில கலந்துரையாடலுக்குப் பின்னர், பொருளாளர் தி. ரங்கராஜன்
நன்றி கூற பொதுக்குழுக் கூட்டம் நிறைவடைந்தது.


