
26-09-2021-அன்று நடைபெற்ற 361-வது கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
26.09.2021 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 361-ஆவது காணொலிக் கூட்டம்
26.09.2021-ஆம் நாள் ஞாயிறு காலை 10.00 மணிக்கு புலவர் த.
இராமலிங்கனார் தலைமை தாங்க நடைபெற்றது. அரிமா முனைவர் துரை.
சுந்தரராஜுலு செயலாளர் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்
அரிமா முனைவர் த.கு. திவாகரன் அவர்கள் தொடக்க உரை ஆற்றினார்.
சிங்கப்பூர் பல்திறன் வித்தகி முனைவர் திருமதி ராஜி சீனிவாசன் (தலைவர்,
சிங்கப்பூர் தமிழ்நாட்டுப் புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வு மையம்) “இனி ஒரு விதி
செய்வோம்” என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
“இனி ஒரு விதி செய்வோம்” – ஆழமான இந்த சொற்றொடரை உணர்ந்து நாம்
சிந்திக்க வேண்டும் என்றும் சமுதாயத்திற்கு உணர்வு சார்ந்த நுண்ணறிவையும்
மன வளத்தையும் அளிக்க வேண்டும் என்றும் தேச நலத்திற்காக விவேகானந்தர்
பொன்மொழிகைளத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் கிடைத்த பிறவியைப்
பெருமைப்படுத்த வேண்டும் என்றும் ZOHO என்ற நிறுவனத்தின் தலைவரின்
தலைமைப் பண்பு குறித்தும், குப்பை எண்ணங்களை மனதில் வைத்துக்
கொள்ளாமல் வன்மம் இன்றி இருக்க வேண்டும் என்றும், உதவும் கரங்கள்
வித்யாசாகர் போன்றோரை எடுத்துக் காட்டி தாய்மொழிப் பற்று, தேசத்தின் வரலாறு
குறித்தும் தம் சிறப்புரையில் தெரிவித்தார். இவரது உரையை சங்க
உறுப்பினர்களும், செயலாளரும் வாழ்த்திப் பாராட்டினர்.
இறுதியாக பொருளாளர் நன்றி கூறு கூட்டம் இனிதே நிறைவுற்றது.
