30-05-2021-அன்று நடைபெற்ற 351-வது கூட்டம்

30-05-2021-அன்று நடைபெற்ற 351-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
30.05.2021 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 351-ஆவது கூட்டம் 30.05.2021-ஆம் நாள்
ஞாயிறு காலை 10.00 மணிக்கு காணொலி மூலம் நடைபெற்றது. செயலாளர்
வரவேற்புரை ஆற்ற தலைவர் புலவர் த. இராமலிங்கம் அவர்கள் தலைமை உரை
ஆற்றினார்.
சிங்கப்பூர் முனைவர் சொல்லின் செல்வர் தீந்தமிழ்ச் சுடர் இரத்தின வெங்கடேசன்,
சங்க இலக்கியச் சமூகம் என்னும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினார்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளாராக அரிமா முனைவர் த.கு. திவாகரன் திகழ்ந்தார்.
இக் கூட்டத்தில் முனைவர் இரத்தின வெங்கடேசன் அவர்களுக்கு “தீந்தமிழ்ச் சுடர்”
என்னும் விருது வழங்கப்பட்டது. முனைவர் இரத்தின வெங்கடேசன் அவர்களை
வை. குமரேசன், இரா. தண்டபாணி, முகம்மது பிலால் (சிங்கப்பூர்), பாபு சசிதரன்
(மும்பை), தி. கோவிந்தராசன் (பாண்டி), பேரா. க. ரேவதி, புலவர் விஜயலட்சுமி,
து.சீ. இராமலிங்கம், ஸ்ரீமதி, நாமதேவு, இரா. தமிழ்ச்செல்வி, சம்பத் பெரியசாமி,
த. வடிவேலு ஆகியோர் வாழ்த்தியும் பாராட்டியும் பேசினர். இறுதியில் முனைவர்
இரத்தின வெங்கடேசன் ஏற்புரை வழங்கினார். பொருளாளர் நன்றி கூற கூட்டம்
இனிதே நிறைவுற்றது.