
17-10-2021-அன்று நடைபெற்ற 363-வது கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
17.10.2021 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 363-ஆவது இணையவழிக் கூட்டம்
17.10.2021-ஆம் நாள் ஞாயிறு காலை 10.30 மணிக்கு புலவர்
த. இராமலிங்கனார் தலைமை ஏற்க, அரிமா முனைவர் துரை. சுந்தரராஜூலு
வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அரிமா முனைவர்
த.கு. திவாகரன் தொடக்க உரை ஆற்றினார்.
உயர்ந்த வாழ்கைக்கு, உயர்ந்த சந்தை உழவர் சந்தையா? புலவர் சந்தையா?
என்பது குறித்து நகைச்சுவை பட்டிமன்றம் நகைச்சுவை பாவலர் குடியாத்தம்
குமணன் தலைமையில் நடைபெற்றது.
உழவர் சந்தையே என்ற அணியில் கீழ்க்கண்டோர் பங்கேற்றனர் :-
- 1. கவிஞர். ந முத்துவேன்
- 2. முனைவர் வாணி ஜோதி
- 3. முனைவர் ஆசுகவி இனியா
புலவர் சந்தையே என்ற அணியில் கீழ்க்கண்டோர் பங்கேற்றனர் :- - 1. பேரா. தமிழியலன்
- 2. முனைவர் வசுந்தரா தேவி
- 3. முனைவர் சாலினி ஜெரால்ட்
இரு அணிகளைச் சேர்ந்தவர்களும் அவர்களது அணிக்கு வலு சேர்க்கும்
விதத்தில் கருத்துக்களை எடுத்து வைத்தனர்.
இரு தரப்பு வாதங்களையும் ஆய்வு செய்த பட்டிமன்றத் தலைவர் உயர்ந்த
வாழ்கைக்கு உயர்ந்த சந்தை உழவர் சந்தையே என்று தீர்ப்பு அளித்தார்.
பொருளாளர் நன்றி கூறு கூட்டம் இனிதே நிறைவுற்றது.
