

17-04-2022-அன்று நடைபெற்ற 375-வது கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
17.04.2022 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்
அண்ணநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 375-ஆவது காணொலிக் கூட்டம்
17.04.2022 ஞாயிறு காலை 10.30 மணிக்கு நடைபெற்றது
செயலாளர் துரை. சுந்தரராஜுலு வரவேற்புரை ஆற்ற, அரிமா முனைவர் த.கு.
திவாகரன் தொடக்க உரை ஆற்றிச் சிறப்புச் சொற்பொழிவாளர் பாவலர்
கவிப்பாவை திருமதி சாவித்திரி கிருஷ்ணமூர்த்தி (பிரான்சு) அவர்களை
அறிமுகம் செய்து வைத்தார்.
திருமதி சாவித்திரி கிருஷ்ணமூர்த்தி புரட்சிச் கவிஞர் பாரதிதாசன் விழாவினை
ஒட்டி “பாவேந்தர் பாரதிதாசன் போன்றிய பெண்ணியம்” என்னும் தலைப்பில்
சிறப்புரை ஆற்றினார்.
ஆற்றிய உரையின் சில பகுதிகள்:
1938-ல் பெண்ணுலகு, பெண்கள் சீர்திருத்தம் குறித்த நூல்களை
எழுதியுள்ளார். பெர்னாட்ஷா பெண்ணியத்தைப் பற்றி கூறுவது போன்று
பாரதிதாசனும் நூல்கள் எழுதினார். குடும்ப விளக்கு புரட்சிப் பெண் என்னும்
நூல்களில் பெண்களைப் பாராட்டி எழுதினார். சமுதாய அவலங்களைப்
பிணைத்தும் வீரம் பற்றியும் கவிதைகள் எழுதி உள்ளார். கைம்மை பற்றி
கவிதை எழுதி உள்ளார்.
இவர் ஒரு செம்மாந்த கவிஞர். மறுமணம், பெண்கல்விகுறித்த கவிதைகள்
மூலம் சமுதாய முன்னேற்றத்திற்கு வழி வகுத்தார். பெண்கல்வி இல்லை
என்றால் சமுதாயம் தடம் மாறிப் போகும் என்பதையும் வாழ்வியல்
சிந்தனைகள் பற்றியும் கவிதைகளில் கூறியுள்ளார். செவ்விய வாழ்வு வாழ
வேண்டும் என்னும் பண்புள்ளவர், பழந்தமிழ் மரபினை ஒட்டி புதுமைகளைப்
புகுத்தியவர்.
திருவாளர்கள் துரை. சுந்தரராஜுலு, ச. கலியமூர்த்தி, து.சீ. இராமலிங்கம், மா.
சிவஞானம், சந்தியா, மணிமேகலை, முருகையன், மு. ஆறுமுக பெருமாள், த.
வடிவேலு ஆகியோர் சிறப்புரையை பாராட்டியும் வாழ்த்தியும் பேசினர்.
சிறப்புரையாற்றிய திருமதி. சாவித்திரி கிருஷ்ணமூர்த்தி ஏற்புரை ஆற்றினார்.
பேரா. பு.பெ. இராமசாமி அவர்கள் “கண்டு சொல்-வென்று செல்” என்னும்
நிகழ்ச்சியை நடத்தினார்.
பொருளாளர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.
