21-07-2019-அன்று நடைபெற்ற 330-வது கூட்டம்

21-07-2019-அன்று நடைபெற்ற 330-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
21.07.2019 அன்று நடைபெற்ற கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 330-ஆவது கூட்டம், தலைவர் தமிழ்ப்பணிச்
செம்மல் புலவர் த. இராமலிங்கம் தலைமையில் 21.07.2019 அன்று நடைபெற்றது.
தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற முனைவர் அமுதா பாலகிருஷ்ணன்,
முனைவர் இதயகீதம் இராமனுஜம் அவர்களுக்கும் மற்றும் தமிழக அரசின் சிறந்த
மொழிபெயர்ப்பாளருக்கான விருது பெற்ற சங்க உறுப்பினர் அரிமா மு. சீனிவாசன்
ஆகியோருக்கும் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
சிறப்பு விருந்தினராக கவிதை உறவு ஆசிரியர் கலைமமாமணி ஏர்வாடி
எஸ். இராதாகிருஷ்ணன் விருதாளர்களைப் பாராட்டிப் பேசினார். முனைவர் அமுதா
பாலகிருண்ணன் மற்றும் இதயகீதம் இராமனுஜம் ஆகியோங்ர தமிழ்ப்பணி குறித்தும்
சிறப்பாக உரையாற்றினார்.
தலைவர் பேசுகையில் நமது சங்க உறுப்பினர்கள் திருவாளர்கள் முனைவர் அமுதா
பாலகிருஷ்ணன் மற்றும் அரிமா மு. சீனிவாசன் அவர்களையும், முனைவர் இதயகீதம்
இராமனுஜம் குறித்தும் வெகுபாகப் பாராட்டிப் பேசினார். பின்னர் விருதாளர்கள் ஏற்புரை
வழங்கினார்கள்.
பின்னர் இயற்கைமுறை வைத்திய நிபுணர் S. அபிராமி அவர்கள் பல்வேறு
நோய்களுக்கான காரணங்களையும் அவைகளை இயற்கைமுறை வைத்தியத்தில்
எவ்வாறு சரிப்படுத்தலாம் என்றும் தெளிவாகக் கூறி, மின்னியல் காட்சி (Power
Presentation) மூலம் தெளிவாக எடுத்துக் கூறினார். உறுப்பினர்கள் கேட்ட அனைத்து
ஐயங்களுக்கும் தெளிவாக பதில் அளித்தார். அவையோரும் பயன் அடையும் வகையில்
பலவேறு இயற்கை வைத்திய முறையை தெளிவாக விளக்கி, அவையோரைத்
தன்வயப்படுத்தினார்.
பாரி நிலைய உரிமையாளர் செ. அமர்ஜோதி அவர்களும் பாராட்டப்பட்டார்கள்.
கல்லூரி முதல்வர் முனைவர் முருககூத்தன் அவர்களும் கலந்து கொண்டு
உறுப்பினர்களுடன் கலைந்துரையாடினார.
முன்னதாக செயலாளர் அரிமா துரை. சுந்ததராஜுலு, ஜூன் மாதம் பிறந்தநாள்
கண்டவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
பொருளாளர் கோ. ஞானப்பிரகாசம் நன்றி கூற கூட்டம் நிறைவடைந்தது.