26.02.2017 – 301- வது மாதாந்திரக் கூட்டம்

Untitled-5 copy
Untitled-1 copy
Untitled-2 copy

26.02.2017 – 301- வது மாதாந்திரக் கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
26.02.2017 அன்று நடைபெற்றக் கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 301-ஆவது மாதாந்திரக்
கூட்டம் 26.02.2017 அன்று சங்கத் துணைத் தலைவர் புலவர் த.
இராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு
விருந்தினர்களாக தமிழக அரசின் திரு.வி.க. விருது பெற்ற
முனைவர் மறைமலை இலக்குவனார் அவர்களும், திருவள்ளுவர்
விருது பெற்ற புலவர் பா. வீரமணி
அவர்களும் கலந்து
கொண்டனர். அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கம் சார்பில் இவர்கள்
பாராட்டப்பட்டனர்.
தலைமை உரை ஆற்றிய புலவர் இராமலிங்கம் உலகத்
தாய்மொழி நாள் கொண்டாடப்படுவதைக் குறித்து பேசுகையில்,
தமிழ் மொழி எவ்வாறு சீரழிக்கப்படுகிறது என்பதைச் சுட்டிக்
காட்டி நம்மைப் போன்ற தமிழ் அமைப்புகள் தான் தமிழ் மொழி
வளர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள்
விடுத்தார். பல்வேறு கருத்துக்களை கூறிய அவர் நாம்
அனைவரும் வீட்டிலும் வெளியேயும் கடை பிடிக்கப்பட
வேண்டிய குறிப்புகளையும் கூறினார்.
உலகத்தாய் மொழி நாள் என்னும் தலைப்பில், உலகத்தில்
உள்ள
பல
நாடுகள் எவ்வாறு தங்கள் தாய்மொழியை
வளர்க்கின்றனர் என்பதை தெளிவாக எடுத்துக் காட்டினார். மற்ற
நாடுகள் கொடுக்கும் முக்கியத்தைக் கூட, நமது நாடு தரவில்லை
என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அண்டை நாடான
மலேசியா தமிழை ஆட்சி மொழி ஆக்கியுள்ளது என்று கூறினார்.
உலகத்தாய் மொழி நாள் எப்பொழுது இருந்து
கொண்டாடப்படுகின்றது என்ற வரலாற்று நிகழ்வுகளை நினைவு
கூர்ந்தார். ஒரு மணி நேரத்திற்கு மேலாக அவையோரைக்
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது அனைவரையும் வியக்க
வைத்தது.
வாழ்த்துரை வழங்கிய புலவர் வீரமணி அவர்கள் சாதாரண
குடியில் தோன்றிய தன்னை துறைமுகப் பொறுப்பு கழகத்தில்
பணியாற்றிய தன்னை இந்த அளவு உயர்த்திய பெருமை தன்
அலுவலகத்துக்கும் நண்பர்களுக்குமே பொருந்தும் என்று
கூறினார். தாய்மொழியைப் பற்றிப் பேசுகையில் பல்வேறு
சம்பவங்களை கூறினார். அயோத்திதாசர் என்று இன்று
அழைக்கப்படும் அறிஞரின் இயற்பெயர் காத்தவராயன் என்பதை
நினைவு கூர்ந்தார். தம்மை அழைத்துப் பெருமைப்படுத்தியது
குறித்து அண்ணாநகர்த் தமிழ்ச்ங்கத்திற்கு நன்றி கூறினார்.
முன்னதாக செயலாளர் அண்மையில் மறைந்த தமிழறிஞர்கள்
டாக்டர் ச.வே. சுப்பிரமணியம், டாக்டர் மணவை முஸ்தபா
ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்தார். அவையோர் அனைவரும்
எழுந்து நின்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
முனைவர் பு.பெ. இராமசாமி அவர்கள் வினா விடை
நிகழ்ச்சியை நடத்தினார்.
பொருளாளர் திரு. ரங்கராஜன் நன்றி கூறகையில், தன் மகன்
திருமண வரவேற்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி
கூறினார். பின்னர் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.