

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கம்
பொதுக்குழுக் கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 28-ஆவது ஆண்டு பொதுக்குழுக்
கூட்டம் 14.09.2025, ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு
அண்ணாநகர், கந்தசாமி நாயுடு கல்லூயில் புலவர் த. இராமலிங்கனார்
தலைமை தாங்கி வரவேற்புரை ஆற்றினார்.
செயலாளர் திரு. துரை. சுந்தரராஜூலு நிகழ்ச்சி நிரலை அவைக்கு
அளித்தார்.
கீழ்கண்ட அலுவல்கள் கலந்துரையாடலுக்கு எடுத்துக்
கொள்ளப்பட்டன :-
- 2024-2025-ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையைச் செயலளார்
திரு. துரை. சுந்தரராஜூலு அளித்தார். திரு. D. பன்னீர்செல்வம்
முன்மொழிய இரா. மோகனசுந்தரம் வழிமொழிய ஆண்டறிக்கை
பொதுக்குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. - 31.03.2025-ஆம் ஆண்டு முடிய தணிக்கைச் செய்யப்பட்ட
கணக்குகளை பொருளாளர் திரு. கோ. ஞானப்பிரகாசம் அளித்தார். திரு.
முயற்சி முருகேசன் முன்மொழிய திரு. சி. ஜெயபால் வழிமொழிய
ஆண்டுக் கணக்குகள் பொதுக்குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஒப்புதல்
அளிக்கப்பட்டது. - 2025-2026-ஆம் ஆண்டுக்கான தணிக்கையாளராக திரு.
D. சரத்குமார் அவர்களை நியமனம் செய்யலாம் என்றும் அவரது
ஊதியத்தை ரூ.4,000/- ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இந்த நிதியாண்டு
முதல் அளிக்கலாம் என்ற செயற்குழுவின் பரிந்துரையை திரு. பு.பெ.
இராமசாமி முன்மொழிய திரு. த.கு. திவாகரன் வழிமொழிய
பொதுக்குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பொதுக்குழுக் கூட்டத்தின் அடுத்த நிகழ்வாக அகவை 80-ஐ நிறைவு
செய்த கீழ்க்கண்ட உறுப்பினர்களுக்கு நினைவுப் பரிசும், சால்வையும்
அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.
1.திரு. ம.ச. பாலசுப்பிரமணி
2.திரு. தி. செல்வராஜ்
3.திரு. வை. குமரேசன்
4. திரு. க. தனபால்
5.திருமதி கி. ஏழிசைவல்லி
6.Dr. T.K. செங்குட்டுவேல்
7.திரு. சி. வெங்கட்ராம்
8.திரு. ஜெ. ஜானகிராமன்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்திற்கு “தாய்த் தமிழ் விருது-2025”
கிடைப்பதற்கான முன்மொழிவுகளை தக்க ஆவணங்களுடன் தமிழ்
வளர்ச்சித்துறை இயக்குநர் அவர்களை அவரது அலுவலகத்தில்
2.9.2025-ஆம் நாள் சந்தித்து, பொருளாளர் திரு. கோ. ஞானப்பிரகாசம்
மற்றும் சோலைத் தமிழினியன் ஆகியோருடன் இணைந்து புலவர் த.கு.
திவாகரன் அளித்தது குறித்த தகவலை அளித்தார்.
தமிழ் ஆராய்ச்சி-வளர்ச்சி நிறுவனமும் ஸ்ரீ கிருஷ்ணா இனிப்பக
நிறுவனமும் இணைந்து 90-அகவை நிரம்பிய தமிழறிஞர்களை
சிறப்பிக்கும் வகையில் 05.09.2025-ஆம் நாள் அன்று வாணி மகாலில்
விழா எடுத்து, அவ்விழாவில் அண்ணநாகர்த் தமிழ்ச்சங்கத்தின்
தலைவர் புலவர் த. இராமலிங்கனார் அவர்களுக்கு சிறப்பு செய்து
பாராட்டப்பட்டது. அண்ணாநகர்த் தமிழ்ச்சங்க பொதுக்குழுக் கூட்டத்தில்
அவரைப்பாராட்டிச் சிறப்பு செய்யும் நிகழ்வும் நடைபெற்றது.
பொருளாளர் திரு. கோ. ஞானப்பிரகாசம் நன்றி கூற பொதுக்குழு கூட்டம்
இனிதே நிறைவுற்றது.
