25.09.2016 – 20 வைணவ நூல்களின் தொகுப்புகளின் குறுந்தகடு வெளியீட்டு விழா

vainava3
vainava1
vainava2

25.09.2016 – 20 வைணவ நூல்களின் தொகுப்புகளின் குறுந்தகடு வெளியீட்டு விழா

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
16.10.2016 அன்று நடைபெற்றக் கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 297-ஆவது மாதாந்திரக் கூட்டம் 16.10.2016 அன்று
சங்கத் தலைவர் புலவர் த. இராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு
விருந்தினராக வழக்கறிஞர் பால. சீனிவாசன் அவர்கள் கலந்து கொண்டு “வள்ளலாரின்
வாழ்வியல் சிந்தனைகள்” என்னும் தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார். பிரம்ம
சமாஜம், ஆரிய சமாஜம், இராமகிருஷ்ண சமாஜம், விவேகானந்தர் சமாஜம்
ஆகியவற்றுடன் வள்ளாருக்குள்ள உறவைப் பற்றிய செய்திகளை விளக்கினார். 7 வயது
முதல் 51 வயது வரை 6 திருமுறைகள் வெளியிட்டது பற்றியும் குறிப்பிட்டார்.
இராமலிங்கர் பற்றி சக்திதாசன் என்ற பெயரில் பாரதியார் சுதேசமித்திரன் இதழில்
எழுதியதை குறிப்பிட்டு, இராமானுஜர் கொள்கையான எம்மதமும் சம்மதம் என்ற
கொள்கையை அவர் ஏற்றுக் கொண்டதையும் குறிப்பிட்டார்.
தனது 7-ஆவது வயதில் “தர்மமிகு சென்னை” என்று குறிப்பிட்ட அவர், தனது
34-ஆவது வயதில் தனது நிலையை மாற்றி “சேற்றிலே விழுந்த சென்னை” என்று
குறிப்பிடுகிறார். குறிக்ககோளுக்கும் கொள்கைக்கும் உள்ள வேறுபாடுகள் குறித்து
தெளிவான விளக்கத்தை அளித்தார்.
வினோபாவின் சர்வோதயம், காந்தியின் அகிம்சை, தனது குறிக்கோளான
ஜீவகாருண்யம் குறித்தும் ஜோதி வழிபாட்டு முறைகளைப் பற்றியும் தெளிவாகக்
குறிப்பிட்டார். கல்வி, ஆன்மிகம், உடல் ஆரோக்கியம், இவற்றுடன் அன்புதான்
ஜீவகாருண்ய ஒழுக்கம் என்று கூறினார். பசித்திரு, தனித்திரு, விழித்திரு என்பதை
குறிப்பிட்ட போதும் உண்மை உணர்வு என்பதை விளக்கினார். ஏறத்தாழ ஒரு மணிநேரம்
அவையோரை தன்வயப்படுத்தினார்.
தலைவர் உரையாற்றுகையில், தன்னை மிகவும் கவர்ந்த வள்ளலாரின்
பெருமைகளைக் கூறினதார். வள்ளலாரின் கருத்துக்களை உறுப்பினர்கள் விரும்பினால்,
தான் வகுப்பு எடுக்கவும் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
முன்னதாக அமுதா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி மாணவி நிஷாந்தினி
வள்ளலார் குறித்து 5 மணித்துணிகள் உரையாற்றினார். துணைத்தலைவர் முனைவர்
அமுதா பாலகிருஷ்ணன் அவர்கள் தான் எழுதிய நூல் ஒன்றினை பரிசளித்தார்.
மாணவியைப் பாராட்டி உறுப்பினர்கள் ரொக்கப் பரிசும் அளித்தனர்.
முன்னதாக சங்கச் செயலாளர் துரை. சுந்தரராசன் வரவேற்புரை ஆற்றினார்.
கள்ளக்குறிச்சி தமிழ்ச்சங்கத் தலைவர் கவிஞர் கோமுகிவாசன் அவர்கள் கலந்து கொண்டு
சிறப்பித்தார்.
இணைச் செயலாளர் து.சீ. இராமலிங்கம் நன்றியுரை கூறுவதற்கு முன் முனைவர்
பு.பெ. இராமசாமி அவர்கள் வழக்கம்போல் வினா விடை நிகழ்ச்சியை நடத்தினார்.
பின்னர் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.