
25-07-2021-அன்று நடைபெற்ற 356-வது கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
25.07.2021 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 356-ஆவது காணொலிக் கூட்டம்
25.07.2021-ஆம் நாள் ஞாயிறு காலை 10.30 மணிக்கு புலவர்
த. இராமலிங்கனார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அரிமா முனைவர்
த.கு. திவாகரன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பளராக தொடக்க உரை ஆற்றினார்.
செயலாளர் துரை. சுந்தரராஜலு வரவேற்புரை ஆற்றினார்.
ஞானச்செவ்வேல், பொறியாளர் கண்ணன் சேஷாத்ரி அவர்கள் “உழவுக்கும்
தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
இவர் சிங்கப்பூரில் உள்ள விஷா இலக்கிய மன்றத்தின் தலைவராக உள்ளார்.
பொருளாளர் நன்றிகூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.
