




23-02-2020-அன்று நடைபெற்ற 338-வது கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
23.02.2020 அன்று நடைபெற்ற கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கம் சார்பில் சிறப்பு விருந்தினர்
திருக்குறள் இல. வெங்கடேசன் அவர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசினை
தலைவர் புலவர் த. இராமலிங்கம் அவர்கள் வழங்கினார், உடன் செயலாளர் துரை, சுந்தரராஜுலு

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கம் சார்பில் சிறப்பு விருந்தினர்
திருக்குறள் இல. வெங்கடேசன் அவர்கள் சிறப்புரையாற்றினார்
உடன் தலைவர் புலவர் த. இராமலிங்கம், செயலாளர் துரை. சுந்தரராஜுலு

கூட்டத்தில் கலந்து கொண்ட சங்க உறுப்பினர்கள்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
23.02.2020 அன்று நடைபெற்ற கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 338-ஆவது கூட்டம், 23.02.2020
அன்று தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கம் தலைமையில்
நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக திருக்குறள் இல. வெங்கடேசன்
“திருக்குறளும் – கம்பனும்” என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
செயலாளர் அரிமா துரை. சுந்தரராஜலு அவர்கள், பிப்ரவரி திங்கள்
20-ஆம் நாள் “உலகத் தாய் மொழிநாள்” கொண்டாடப்படுவது வழக்கம்
என்று கூறி அது குறித்து தலைவர் உரையாற்ற வேண்டுமென்று
வேண்டுகோள் வைத்தார்.
தலைவர் பேசுகையில் தாய்மொழி நாள் யுனெஸ்கோ அறிவித்த பிப்ரவரி
21-ஆம் நாள் முதன்முதலாக வங்கதேசம் கொண்டாடியது
எனக்குறிப்பிட்டு, உலகில் 7700 மொழிகள் இருப்பதாகவும், அதில் 13
மொழிகள்தான் பேச்சு எழுத்து வடிவில் இருப்பதாக கூறினார். அதில்
தமிழ்மொழி தான் முதன்மையாகத் திகழ்வதாக கூறினார். இலக்கிய,
இலக்கணம் கொண்ட தமிழ்மொழி சிறந்த மொழி எனக் கூறினார். பேரறிஞர்
அண்ணா முதல்வர் ஆனபோது, மெட்ராஸ் ஸ்டேட் என்பதை மாற்றி
தமிழ்நாடு என்று பெயர் சூட்டியதைக் குறிப்பிட்டார். செம்மொழி
ஆவதற்கான 13 இலக்கண தகுதிகளைப் பெற்றிருந்தும் தமிழுக்கு
செம்மொழி அந்தஸ்து கிடைக்காதது வருத்தமளிப்பதாக கூறினார்.
தமிழ்நாட்டில் தமிழ்தான் இல்லை குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர்
வைத்தல், தமிழில் கையெழுத்திடுதல் அவசியத்தை வலியுறுத்தினார்.
பாரதிதாசன், கம்பன் போன்றவர்கள் தமிழை உயர்த்திப் பேசியதையும்
குறிப்பிட்டார்.
திரு. இல. வெங்கடேசன் பேசுகையில் 12 மொழிகளைக் கற்ற பாரதியார்
தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று கூறியதை நினைவு கூர்ந்தார். திருக்குறள் எண் 7 என்றம் கம்பராமாயணம் 7 அவதாரம்
என்று ஒப்பிட்டு பேசினார். இரண்டுக்கும் பொது எண். 7 ஆல்பர்ட் ஸ்வைசர்
தமிழ் சிறந்த மொழி என்று சொன்னதை எடுத்துக் காட்டினார்.
நன்றியறிதலுக்கு கும்பகர்ணனையும், திருவள்ளுவர் சொன்ன
நன்றியறிதல் அதிகாரத்தையும் ஒப்பிட்டு பேசினார்.
அவர் உரையாற்றிய நேரம் முழுவதும் கம்பனையும், திருவள்ளுவரையும்
ஒப்பிட்டு பல செய்திகளைக் கூறி அவையோரை தன்வயப்படுத்தினார்.
கம்பன் 800 குறளுக்குமேல் இராமாயணத்தில் பயன்படுத்தி உள்ளார்
என்பது கூடுதல் தகவல்.
முன்னதாக வரவேற்புரையாற்றிய செயலாளர், அனைவரையும்
வரவேற்று பிப்ரவரி மாதம் பிறந்தநாள் கண்ட உறுப்பினர்களுக்குப்
பாராட்டுத் தெரிவித்தார்.
முனைவர் பு.பெ. இராமசாமி அவர்கள் வினா விடை நிகழ்ச்சி நடத்தி
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
கூட்டத்தில் வருகை தந்த திரு. ராஜேந்திரன் சோர்டியா, தமிழ்மொழி
குறித்து திரு.வி.க. பேசியதை எடுத்துக் கூறினார். பார்வையாளராக
வந்திருந்த திருமதி பத்மாவதியின் குழந்தை 6 வயது காயத்ரி குறள்க் கூறி
அவையோரை வியப்பில் ஆழ்த்தினார்.
செயலாளர் அனவைருக்கும் நன்றி கூறி, குறிப்பாக இனிப்பு வழங்கிய
ச. கலியமூர்த்திக்கு நன்றி கூற, கூட்டம் இனிதே நிறைவடைந்தது.
