21.05.2017 – 305- வது மாதாந்திரக் கூட்டம்


அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
21.05.2017 அன்று நடைபெற்றக் கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 305-ஆவது மாதாந்திரக் கூட்டம்
21.05.2017 அன்று சங்கத் தலைவர் முனைவர் கவிஞர் அமுதா
பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. லட்சுமி அம்மாள்
கல்வியியல் கல்லூரி மேனாள் முதல்வர் திரு. சு.வஜ்ரவேலு அவர்கள் சிறப்பு
விருந்தினராக கலந்து கொண்டு ‘திரு.வி.கவும், சமுதாய நலனும்’ என்னும்
பொருள் பற்றி சிறப்புரை ஆற்றினார்
அவர் பேசுகையில், திரு.வி.க. வின் வாழ்க்கை வரலாறு, அவரது
கொள்கைகள் குறித்து விரிவாகவும் விளக்கமாகவும் பல்வேறு
தலைப்புகளில் கூறினார். 12 தொழிற்சங்கங்களை உருவாக்கி, அவற்றின்
தலைவராகவும் இருந்துள்ளார். அவர் ஒரு காந்தியவாதியாகவும் திகழ்ந்தார்.
விதவைத் திருமணத்தை ஆதரித்தார்’. பெண்களுக்கு பொட்டு கட்டி
விடுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவத்தார்.
மிகச் சிறந்த மேடைப் பேச்சாளராக விளங்கனிர். இவருக்குப் பின்னர்
அறிஞர் அவர்கள் இவரது வாரிசாக விளங்கினார். உலக அளவில் சிறந்த
தொழிற்சங்கவாதியாகவும், தமிழ்மொழியில் ஆற்றல் மிக்கவராகவும்,
மொழிப்பற்று நாட்டுப் பற்று கொண்டவராகவும், அறப்பணியில் ஈடுபாடு
உள்ளவராகவும் விளங்கினார். நேர்மை, கற்புடமை, ஒழுக்கம் ஆகியவற்றில்
உலகத்திற்கே வழிகாட்டியாக இருந்தார். இவ்வாறு 1-1/2 மணிநேரம்
அவையோரை தன்வயப்படுத்தினார்.
துணைத் தலைவர் அவர்கள் கூறும்போது தனக்கும் அவருக்கும் உள்ள
நீண்ட கால தொடர்பு குறித்து தமிழ் எழுத்தாளர் சங்க சார்பில் எந்த
மாநிலத்திற்கு சென்றாலும் தனக்கென முத்திரை பதிப்பவர் என்று
பெருமையோடு கூறி அண்மையில் கொல்கத்தா சென்ற போது இவரது
பேச்சை கேட்டு அனைவரும் வியப்படைந்ததாக கூறினார். தமிழாசிரியர்
ஒருவர் கல்லூரியில் முதல்வராக வருவது வியக்கத்தக்க செயல் என்றார்.
பட்டப் படிப்புக்கு பின்னர் இரண்டு டாக்டர் பட்டங்களை பெற்றது
இவருடைய திறமைக்குச் சான்று எனக் கூறினார்.
முன்னதாக வரவேற்புரை ஆற்றிய செயலாளர், திரு.வி .. க அவரகள்
முதல் முதலாக திரு. சக்கரை செட்டியாருடன் இணைந்து
தொழிற்சங்கத்தை துவக்கினார் என்று கூறி B & C மில்
தொழிற்சங்கத்திற்கு தலைவராக இருந்தார். எளிமையான தலைவராக
இருந்தார். காரல்மார்க்ஸ் தத்துவத்தை பின்பற்றியதோடு, காந்தியையும்
வள்ளுவத்தையும் இரு கண்களாகப் பாவித்தார். மத
நல்லிக்கணத்திற்காகப் பாடுபட்டார். தந்தை பெரியாரோடு இணைந்து
பணியாற்றி பின்னர் கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டார்.
கண்பார்வை இழந்தி நிலையில் படுக்கையில பிதற்றல், முதுமையில
உளறல் என்னும் நூல்களை, இவர் சொல்ல டாக்டர் மு.வ. அவர்களும்,
அன்பு கணபதி அவர்களும் எழுதினர். மனித வாழ்க்கையும் காந்தி
அடிகளும், பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கை விளக்கம், முருகன்
அல்லது அழகு என்ற நூல்களையும் எழுதியுள்ளார். அரசியல்வாதியாக
தொழிலாளர் தோழனாக, பத்திரிகையாளனாக, பதிப்பாளராக ஒரு பன்முக
அறிஞராக விளங்கினார் என்று கூறி அனவைரையும் வரவேற்றார்.
பின்னர் மே மாதம் பிறந்த நாள் கண்டவர்கள் பெருமைப்
படுத்தபட்டார்கள். தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகிகளோடு இணைந்து கடந்த
20 ஆண்டுகளாக பணியாற்றி வரும் திரு. மணி அவர்கள் தனது 60 வயது
நிறைவடைந்த நிலையில் அவரைப் பாராட்டும் முகத்தான் அவருக்கு
பொன்னாடை அணிவித்து, வாழ்த்து மடலோடு ரூபாய் ஐயாயிரம்
ரொக்கமாக சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டது.
நன்றியுரை ஆற்றிய பொருளாளர் ரங்கராஜன் சங்கத்திற்கு திரு. மணி
ஆற்றிவரும் பணிகளை எடுத்துக் கூறினார். திருமதி பாரததேவி
அவர்களது மகன் திருமண அழைப்பிதழ் பெற்ற அனைவரும் நிகழ்ச்சியில்
கலந்து கொள்ள வேண்டுகோள் விடுத்தார். ஜூன் திங்கள்
நடைபெறவிருக்கும் முப்பெரும் விழாவிற்கு உறுப்பினர்களின்
ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகக் கூறினார். பின்னர் கூட்டம் இனிதே
நிறைவடைந்தது.




