20.3.2016 – தொல்காப்பியம் ஒரு புதிய பார்வை

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 20.03.2016 அன்று நடைபெற்ற கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 260-ஆவது கூட்டம் சங்கத் தலைவர் புலவர் த. இராமலிங்கம் அவர்கள் தலைமையில் 20.03.2016 அன்று நடைபெற்றது. தமிழ்ச்சங்கத்தின் மேனாள் செயலாளர் முனைவர் வள்ளியம்மாள் கணவரும், பொறியியல் அறிஞருமான திரு. சொ.அ.லா. கணேசன் அவர்கள்
“தொல்காப்பியம் ஒரு புதிய பார்வை” என்னும் தலைப்பில் உரையாற்றினார்.
தலைமை உரையாற்றிய தலைவர் தொல்காப்பியத்தின் பல்வேறு சிறப்பியல்புகளைப் பற்றியும்,nதமிழ் மொழி எவ்வளவு தொன்மை வாய்ந்தது எனவும் அவையோருக்கு எடுத்துரைத்தார். சிறப்பு சொற்பொழிவாளர் பேசுகையில் தான் ஒரு பொறியாளராக இருந்தாலும், தமிழின் மீதுள்ள பற்றின் காரணமாகவும், ஆர்வத்தின் காரணமாகவும் இந்தப் பொருளை எடுத்து ஆய்வுகள் செய்ததாகவும் கூறினார். இந்த ஆய்வுகள் குறித்து மொழியும் தரமும் என்ற தலைப்பில் 9 நூல்களை வெளியிட்டுள்ளதை அறிவித்து அனைத்துக் கருத்துக்களையும் அந்த நூல்களில் ஆய்ந்து இருப்பதாகவும் தெளிவாக எடுத்துரைத்தார். ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு இடம், ஒவ்வொன்றும் அதனதன் இடத்தில் இருக்க வேண்டும், அந்தந்த இடத்தில் இல்லாமல் போவது வேறுபாடு ஆகிறது.
அந்த வேறுபாடு இருக்கின்ற காலத்தில் நாம் அதை அறிந்து அந்தக் குறைகளை நீக்கப்
பாடுபடவேண்டும் என்று அவையோரை கேட்டுக் கொண்டார். அவையோர் எழுப்பிய அனைத்து வினாக்களுக்கும் தக்க பதிலளித்து அவையோரை வியப்பில் ஆழ்த்தினார்.
முன்னதாக சங்கச் செயலாளர் துரை. சுந்ததர்ராஜன் வரவேற்புரை ஆற்றினார், இணைச் செயலாளர் ஞானப்பிரகாசம் நன்றி கூற கூட்டம் நிறைவடைந்தது.

