20.12.1015 – வெளிநாட்டு சுற்றுலா அனுபவங்கள்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 20.12.2015 அன்று நடைபெற்ற கூட்டத்தில்
“வெளிநாட்டு சுற்றுலா அனுபவங்கள்” என்னும் பொருள் பற்றி
திருமதி பத்மினி பட்டாபிராமன் அவர்கள் உரையாற்றினார்.
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் கூட்டம் சங்கத் துணைத் தலைவர் புலவர் அமுதா பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. எழுத்தாளரும், உரத்தசிந்தனை அமைப்பின் துணைத் தலைவருமான திருமதி பத்மினி பட்டாபிராமன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தனது வெளி நாட்டு சுற்றுப் பயணங்களைப் பற்றி சிறப்புரையாற்றினார். தான் சென்று வந்த நாடுகளான கென்யா, தான்சானியா, நேபாளம், எகிப்து, வாட்டிகன் சிட்டி, ஜெர்மனி, துபாய், மஸ்கட், பெல்ஜியம், ஹாங்காங், பாரீஸ் ஆகிய நாடுகளைப் பற்றியும் அங்கு வாழும் மக்கள் அவர்களின் வாழ்க்கை முறை, உணவுப்பழக்க வழக்கங்களை போன்ற பல தகவல்களை கூறினார். 2 ஆண்டுகள் மொரிஷியஸ் நாட்டில் இருந்ததையும் சுவைபட கூறினார். அவையோர் கேட்ட அனைத்து சந்தேகங்களையும் தெளிவுபடுத்தினார். அவையோரும் தாங்களே அந்த நாடுகளுக்கு சென்று வந்ததைப்போல உணர்வதாக கூறினார்.
தலைவர் அமுதா பாலகிருஷ்ணன் பேசுகையில், சிறப்பு விருந்தினரை சிறப்பாக ,தன் குடும்பத்திற்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் உள்ள உறவைப்பற்றி நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்.
முன்னதாக வரவேற்புரையாற்றிய செயலாளர் துரை. சுந்ததராஜலு நமது சங்க உறுப்பினர்களான திரு. பா. ஸ்ரீனிவாஸ் அவர்களும் அவரது மனைவி திருமதி. சங்கராந்தி அவர்களும் அண்மையில் பெய்த பெருமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி அகால மரணமடைந்த செய்தியை மிகுந்த வேதனையுடன் அறிவித்தார். அவையோர் அனவைரும் எழுந்து நின்று இரங்கல்தெரிவித்தனர். இவர்களது மறைவு தமிழ்ச்சங்கத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று கூறி, நமது
சங்கச் செய்திகள் உலகளாவிய அளவில் செல்ல இணையதளம் உருவாக்கித் தந்தவர் திரு. ஸ்ரீனிவாஸ் அவர்கள் தான் என்று கூறினார்.

