20-10-2019-அன்று நடைபெற்ற 334-வது கூட்டம்

20-10-2019-அன்று நடைபெற்ற 334-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
20.10.2019 அன்று நடைபெற்ற கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 334-ஆவது கூட்டம், தலைவர்
தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கம் தலைமையில் 22.10.2019
அன்று நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அரிமா முனைவர் த.கு. திவாகரன்
அவர்கள் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. என்னும் தலைப்பில் அவர்களின்
வாழ்க்கை வரலாற்றினை தெளிவாக எடுத்துரைத்தார். காங்கிரஸ்
பேரியக்கத்தில் அவர் ஆற்றிய பங்கு, தமிழரசு கழகம் தோன்றிய வரலாறு
போன்ற செய்திகளைக் கூறினார். அவர் கலந்து கொண்ட பல்வேறு
போராட்டங்கள், குறிப்பாக ஆந்திராவுக்கு செல்லவிருந்த திருத்தணியை
தமிழ்நாட்டுடன் இணைத்தது. தேவிகுளம் பீர்மேடு
பகுதிகளை
கேரளாவுக்குச் செல்லவிடாமல் தடுத்தது போன்ற பல்வேறு
போராட்டங்களில் கலந்து கொண்டதை பெருமயுடன் குறிப்பிட்டார்.
தலைவர் பேசுகையில் முனைவர் திவாகரன் குறித்து பெருமைபட
அறிமுகம் செய்தார். தமிழறிஞர் உமா மகேசுவரன் பிள்ளை அவர்களின்
கொள்ளுப் பேரன் என்றும், சிறந்த தமிழறிஞர் எனவும் குறிப்பிட்டு,
திராவிட இயக்க முன்னோடிகள் என்ற தலைப்பில், டாக்டர் நடேசன்,
டி.எம். நாயர், பிட்டி தியாகராயர் போன்ற பெரும் தலைவர்களின் வாழ்க்கை
வரலாற்றினை தொடர் சொற்பொழிவாக நடத்தி வருவதையும் குறிப்பிட்டு
அறிமுகப்படுத்தினார்.
முன்னதாக செயலாளர் அரிமா துரை. சுந்தரராஜலு வரவேற்புரை
ஆற்றினார். அக்டோபர் மாதம் பிறந்த நாள் கண்டவர்கள்
பாராட்டப்பட்டனர். முனைவர் பு.பெ. இராமசாமி அவர்கள் வினா விடை
நிகழ்ச்சி நடத்தி பரிசு வழங்கினார். பொருளார் ஞானப்பிரகாசம் நன்றி கூற
கூட்டம் நிறைவடைந்தது.