20-01-2019-அன்று நடைபெற்ற 324-வது கூட்டம்

20-01-2019-அன்று நடைபெற்ற 324-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
20.01.2019 அன்று நடைபெற்ற கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 324-ஆவது கூட்டம் 20.01.2019 அன்று
தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கம் அவர்கள் தலைமையில்
சிறப்பாக நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக “தமிழவேள்” சிவாலயம் மோகன் அவர்கள் கலந்து
கொண்டு “தமிழர் திருநாள், திருவள்ளுவர் திருநாள்” என்னும் தலைப்பில் சிறப்பாக
உரையாற்றினார்.
முன்னதாக நமது சங்கத்தின் புரவலர் திரு. T.R. இராசு அவர்களின் துணைவியார்
சஞ்சீவிபாய், மூத்த தமிழறிஞரும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக
மேனாள் துணைவேந்தர் க.பா. அறவாணன் ஆகியோர் மறைவுக்கும் அஞ்சலி
செலுத்தப்பட்டது.
செயலளார் அரிமலா துரை. சந்ததராஜலு வரவேற்புரை ஆற்றினார். தலைவர்
சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து உரையாற்றினார்.
புதிததாக வந்திருந்த உறுப்பினர் திரு. கோபால் மாரிமுத்து அவர்கள்
மாணவர்களின் தமிழ்ப்பற்றை வளர்க்கும் வகையில் ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று
திருக்குறள் போட்டி நடத்தி பரிசுகள் வழங்குவதாகத் தெரிவித்த அவர் திருக்குறளின்
133 அதிகாரங்களையும் மனப்பாடமாக ஒப்புவித்து அவையோர்களை
தன்வயப்படுத்தினார்.
அடுத்து கோட்டக் மகேந்திரா நிறுவன துணைத் தலைவர் திரு.
இராதாகிருஷ்ணன் அவர்களும், அந்த நிறுவனத்தின் மேலாளர் செல்வி ஷாரோன்
அவர்களும், மூத்த குடிமக்களின் நலனுக்காக தங்களது நிறுவனம் பல்வேறு
திட்டங்கள் வைத்திருப்பதாகக் கூறி இது குறித்து விரிவாக விவாதிக்க வரும்
25.01.2019 அன்று அண்ணாநகர் சரவணபவன் உணவகத்தில் கருத்தரங்கு ஒன்றை
ஏற்பாடு செய்திருப்பதாக கூறி அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று
வேண்டுகோள் விடுத்தார். பின்னர் முனைவர் பு.பெ. இராமசாமி அவர்கள் வினாடி
வினா நிகழ்ச்சி நடத்தி பரிசு வழங்கினார்.
செயலாளர் நன்றி கூற கூட்டம் இனிரேத நிறைவடைந்தது.