19-05-2019-அன்று நடைபெற்ற 328-வது கூட்டம்

19-05-2019-அன்று நடைபெற்ற 328-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
19.05.2019 அன்று நடைபெற்ற கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 328-ஆவது கூட்டம் 19.05.2019 அன்று தலைவர்
தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக அரிமா முனைவர் நா. சந்திரபாபு அவர்கள் கலந்து கொண்டு
“பாவேந்தரின் சமுதாயச் சிந்தனைகள்” என்னும் தலைப்பில் உரையாற்றினார்.
முதன்முறையாக பாரதியாரை சந்தித்தபோது அவரை ஒரு கவிதைப் பாடுமாறு
கேட்டவுடன், உடனடியாக பாடல் எழுதி பாராட்டுப் பெற்றவர். நிரவி என்னும் ஊரில்
ஆசிரியராகப் பணியாற்றினார். 1919 முதல் 1921 வரை பணி இடைநீக்கம்
செய்யப்பட்டபோது நீதிமன்றம் சென்று வெற்றி பெற்றார். 1928-ஆம் ஆண்டு
சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்தார். முதன் முதலாக குடும்பக் கட்டுப்பாடு குறித்து
பாடலை எழுதினார்.
தாழ்த்தப்பட்டடோர் நலனுக்காகப் பாடுபட்டார். சமூகத்தில் பெண்கள் கடவுளாக
சித்தரித்தார். பிராமணீயத்தை எதிர்த்தார். பொதுவுடமை கொள்கையை ஆதரித்தார்.
தமிழியக்கம் என்னும் நூலை ஒரே இரவில் எழுதினார். 37 ஆண்டுகள் ஆசிரியராகப் பணி
முடிந்து ஓய்வுபெற்றார்.
1946-ல் அரசியல் பிரவேசம். 1954-ல் புதுவை சட்டமன்ற உறுப்பினர். தேசிய உணர்வு,
தொழிலாளர் நலன் போன்றவற்றில் ஈடுபாடு. இவர் எழுதிய பாண்டியன் பரிசு நூல்
சாகித்ய அகடமி பரிசு பெற்றது. 1968-ஆம் ஆண்டு தமிழக அரசும், 1972-ஆம் ஆண்டு
புதுவை அரசும் திரு உருவச்சிலை அமைத்தன.
தமிழக அரசுஅவர் பெயரில் பல்கலைக்கழகம் அமைத்துப் பெருமைப்படுத்தியது.
இவ்வாறாக சிறப்பு விருந்தினர் உரையாற்றினார்.
அடுத்த நிகழ்வாக 31.05.2019 அன்று, பணிநிறைவு பெறும் கந்தசாமி நாயுடு கல்லூரி
முதல்வர் முனைவர் அ. சினிவாசன் அவர்களுக்கு தமிழ்ச்சங்கம் சார்பில் பாராட்டு விழா
நடைபெற்றது.
செயலாளர் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி உரையாற்றினார். புலவர். தங்க
ஆறுமுகன், அவர்கள் பாராட்டு பேசினார்.
தலைவர் பேசுகையில் திருச்சி மாவட்டம் முசிறியில் சாதாரண குடும்பத்தில் பிறந்து,
தன் குடும்ப சூழ்நிலையை உணர்ந்து தனது கல்வியை முடித்து சிறப்பாக விளங்குகிறார்
எனப் பாராட்டினார். ஏற்புரை ஆற்றிய முனைவர் சீனிவாசன், தான் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து,
தாயாரின் அரவணைப்பில் வளர்ந்து, அவர் விரும்பியவாறு பட்டப்படிப்பு, பட்ட
மேற்படிப்பு முடித்து, பச்சையப்பன் கல்லூரி, கந்தசாமி நாயுடு கால்லூரி போன்றவைகளில்
சிறப்பாகப் பணியாற்றியதை நெழிச்சியோடு குறிப்பிட்டு “அண்ணாநகர்த்
தமிழ்ச்சங்கத்திற்கு நன்றி தெரிவித்தார்.
முனைவர் பு.பெ. இராமசாமி வினா விடை நிகழ்ச்சி நடத்தி பரிசு வழகினார்.
செயலாளர் நன்றி கூற கூட்டம் நிறைவடைந்தது.