16-08-2015 – விடுதலையும் வாழ்க்கையும்

images-1.jpg images-2.jpg images-3.jpg

மேலும் அறிய…. (.pdf)

16-08-2015 – விடுதலையும் வாழ்க்கையும்

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கக் கூட்டம் 16.08.2015 அன்று சங்கத் தலைவர் புலவர் த. இராமலிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக கவிஞர் ஜெயபாஸ்கரன் கலந்து கொண்டு “விடுதலையும் வாழ்க்கையும்” என்னும் தலைப்பில் புதிய கோணத்தில்
தனது உரையை நிகழ்த்தினார். இன்னும் விடுதலைப் பெறாமல் இருக்கும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் நிலங்கள்
இன்னும் விடுதலை பெறவில்லை என்றும், நாட்டையே அழித்து வந்த வேலிக்காத்தான் முட்செடிக்கு விடுதலை கொடுக்க 15 ஆண்டுகள்
ஆயின என்று தெரிவித்தார். அடுத்ததாக, முற் காலங்களில் நமது முன்னோர்கள் வைத்த ஊர்களின் பெயர்கள் தற்போது எவ்வாறு உருமாறி
சிதைந்து போயுள்ளதை வேதனையுடன் குறிப்பிட்டார். கல்வியைப் பற்றி குறிப்பிடுகையில் கல்வி அரசிடமும், தனியாரிடமும் சிக்கிச்
சீரழிந்து திரிசங்கு நிலையில் இருப்பதாக கூறினார். தற்போதைய நிர்வாகம் சீர் குலைந்து இருப்பதை ஆதங்கத்தோடு குறிப்பிட்டு
இவைகள் சீர்படுத்தப்பட்டால்தான் நாடு உண்மையியே விடுதலை பெற்றதாக அர்த்தம் என்று சுமார் ஒன்றரை மணிநேரம் எழுச்சியுடன்
உரையாற்றி தான் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதையும் அறிவித்தார். தலைவர் தனது உரையில் ஊராட்சி
ஒன்றிய துவக்கப்பள்ளியில் தமிழ் வழியில் படித்து எந்தவித பின்புலமும் இன்றி தனது சொந்த உழைப்பால் உயர்ந்த அவரை வெகுவாகப்
பாராட்டி இந்தத் தலைப்பில் இப்படியும் பேசலாம் எனப் பேசிய அவரை வானளாவப் புகழ்ந்தார். சிறப்பு அழைப்பாளராகக் கூட்டத்தில்
கலந்து கொண்ட கலைமாமணி ஏர்வாடி இராதாகிருஷ்ணனுக்கு கவிஞர் ஜெயபாஸ்கரனை அறிமுகம் செய்தமைக்கு நெஞ்சார நன்றி
தெரிவித்தார்.
கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புச் செய்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திரு. தனவேல் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்
திரு. ஜெயபாஸ்கரின் உரை சிறப்பாக அமைந்துள்ளது எனப் பாராட்டினார். மேலும் இந்தக் கூட்டம் மூத்த குடிமக்கள் நிறைந்த அவையாக
உள்ளதென்றும், இவர் கூறிய கருத்துக்கள் இளைஞர்களைச் சென்று அடைய வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தினார்.
அவையோர் எழுப்பிய அனைத்து வினாக்களுக்கும் விடையளித்தார். பின்னர் செயலாளர் நன்றி கூறக் கூட்டம் நிறைவடைந்தது.