
16-01-2022-அன்று நடைபெற்ற 369-வது கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
16.01.2022 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்
அண்ணநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 369-ஆவது மெய்நிகர் காணொலிக் கூட்டம்
16.01.2022 ஞாயிறு மாலை 5.00 மணிக்கு நடைபெற்றது. செயலாளர்
துரை. சுந்தரராஜுலு தலைமை உரையும் வரவேற்புரையும் ஆற்ற அரிமா முனைவர்
த.கு. திவாகரன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக திகழ்ந்தார்.
திருமதி சந்திர கௌரி சிவபாலன் எழுத்தாளர் தமிழ் வான் அவை அமைப்பாளர்
(ஜெர்மனி) ஜெர்மனியில் தமிழர் பண்பாட்டு மாற்றம் என்னும் தலைப்பில்
ஜெர்மனியில் இருந்து சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினார்.
ஆற்றிய உரை : ஜெர்மனி 16 மாநிலங்களைக் கொண்ட 8 கோடியே 30 லட்சம்
மக்கள் வாழும் ஜனநாயக நாடு. 60,000 தமிழர்கள் அரசியல் தஞ்சம் கோரி
வந்தனர். அகதிகளை ஏற்றுக் கொள்ளும் நாடாக விளங்குகிறது. அங்கு வாழும்
தமிழர்களின் கல்வி நிலை, உணவு, திருமணம், மொழிகலப்பு, பண்பாட்டு கலப்பு,
நடைபெறும் விழாக்கள் குறித்தும் ஒவ்வொரு பிராந்திய ரீதியாக ஆடை வேறுபடும்
நிலைமை குறித்தும், குங்குமப் பொட்டு வைப்பதால் ஏற்படும் இடையூறால் பொட்டு
வைப்பதில்லை என்றும் சாதி ஏற்றத் தாழ்வு இல்லை என்றும் எல்லா தொழில்
செய்வோரும் சமமாக பார்க்கப்படுகின்றனர். தமிழர்கள் கோயில்கட்டி
இறைவழிபாடும், ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலயம் செல்லவும், விரதம்
சம்பிரதாயங்கள் கடைபிடிக்கவும் அனுமதிக்கப்படுகின்றனர்.
கார் உற்பத்தி பெருந்தொழில். நிலக்கரியும் இரும்பு தொழில் வளர்ச்சியில் முக்கிய
பங்கு வகிக்கின்றன. மொழிக்கு கல்வி அடித்தளமாக விளங்குகிறது. கிறித்துமஸ்
எல்லோரும் கொண்டாடும் விழா. அமைதி வழியில் அந்நாட்டுப் பண்பாடுகளை ஏற்று
பல பண்பாட்டு (Multi Culture) முறைகளை ஏற்று வாழ்ந்து வருகின்றனர்.
இவரது உரையை துரை. சுந்தரராஜூலு, முல்லை நாச்சியார், முனைவர் ரேவதி,
எழுத்தாளர் இராஜேஸ்வரி பாலசுப்ரமணியன், ச. கலியமூர்த்தி, ஸ்ரீமதி
வெங்கடாசலம் ஆகியோர் வாழ்த்தியும், பாராட்டியும் பேசினர். திருமதி கௌரி
சிவபாலன் ஏற்புரை ஆற்றினார்.
பொருளாளர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.
