08-08-2021-அன்று நடைபெற்ற 358-வது கூட்டம்

08-08-2021-அன்று நடைபெற்ற 358-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
08.08.2021 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 358-ஆவது காணொலிக் கூட்டம்
08.08.2021-ஆம் நாள் ஞாயிறு மாலை 05.30 மணிக்கு புலவர் த.
இராமலிங்கனார் தலைமையில் நடைபெற்றது.
அரிமா முனைவர் த.கு. திவாகரன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக தொடக்க உரை
ஆற்ற, செயலாளர் துரை. சுந்தரராஜலு வரவேற்புரை ஆற்றினார்.
தலைவர் அவர்கள் தலைமை உரையில் ஆலயங்களில் தமிழில் அர்ச்சனையை
துவக்கி வைக்கும் ஆணையைப் பிறப்பித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி
தெரிவித்தார். இன்றைய கூட்டத்தில் “சீனாவில் செந்தமிழ் வளர்ச்சி” என்னும்
பொருள் பற்றி தண்தமிழ்ச் செல்வர் தமிழ்த்திரு. திருமலை சோமு சிறப்புரை
ஆற்றினார். இவர் சீன வானொலித் தமிழ்ப் பிரிவில் செய்தி ஆசிரியராக பணி
புரிபவர்.
ஆற்றிய உரை : சீன வானொலி நிலையம் 58 ஆண்டகளாக தமிழ் ஒளிபரப்பு
செய்கிறது. நிலையத்தில் 14 சீனர்கள் தமிழ்ப்பிரிவில் பணியாற்றுகின்றனர்.
ஒளிப்பரப்பப்படும் செய்திகள் நம்பகத் தன்மை கொண்டவை. எனவே இரு தரப்பு
உறவுகளை வளப்படுத்தும் விதமாக உள்ளது. பெய்ஜிங்கில் தமிழ்ச்சங்கம்
செயல்படுவதோடு அதில் பல சீனர்கள் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர்.
தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. தமிழ்ப் படைப்புகளில் சீனர்கள் பங்கு
பெறுகின்றனர். சீனாவில் உள்ள சுற்றுலாத் தலங்கள் குறித்து பல நூல்கள் தமிழில்
உள்ளன. தமிழ் மொழி வளர்ச்சிக்கு சீன வானொலி நிலையம் ஆற்றும் பணி
போற்றத்தக்கது.
பொருளாளர் நன்றிகூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.