சுந்தர்ராஜீலு அவர்களின் 75 ஆவது அகவை நிறைவு பவழ விழா

42.jpg

அண்ணாநகர் தமிழ் சங்கச் செயலாளர் துரை. சுந்தர்ராஜீலு அவர்களின் 75 ஆவது அகவை நிறைவு பவழ விழா 23.11.2014 அன்று அண்ணாநகர் கந்தசாமி நாயுடு கல்லூரியில் புலவர் த. இராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

மேலும் அறிய…. (.pdf)

சுந்தர்ராஜீலு அவர்களின் 75 ஆவது அகவை நிறைவு பவழ விழா

அண்ணாநகர் தமிழ் சங்கச் செயலாளர் துரை. சுந்தர்ராஜீலு அவர்களின் 75 ஆவது அகவை நிறைவு பவழ விழா 23.11.2014 அன்று அண்ணாநகர் கந்தசாமி நாயுடு கல்லூரியில் புலவர் த. இராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

பாராட்டினார்
செயற்குழு உறுப்பினர் கவிஞர் தூ.சி. இராமலிங்கம் வரவேற்புரை ஆற்றினார்.
துணைத் தலைவர் கவிஞர் அமுதா பாலகிருண்ஷன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து
வழங்கியதோடு வாழ்த்துரையும் வழங்கினார். முன்னிலை வகித்த முன்னாள் மேயர் சா.
கணேசன் விழா நாயகருக்குப் பொன்னாடை அணிவித்து வாழ்த்துரை வழங்கினார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சு. இராஜேஸ்வரன் இனித்திடும் தமிழில் சிறப்புப்
பேரூரை ஆற்றினார். கலைமாமணி ஏர்வாடி இராதாகிருஷ்ணன், கந்தசாமி நாயுடு
கல்லூரி முதல்வர் பெ. சேகர், தமிழக சட்டப்பேரவையின் ஓய்வு பெற்ற இணைச்
செயலர் இரா. வெங்கடேசன், கோ. ஞானப்பிரகாசம், நைட்டிங்கேல் அரிமா சங்க
நிறுவனர் சத்தியபாமா ரகுநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஓய்வுபெற்ற
சட்டப்பேரவை செயலாளர் எம். செல்வராஜ், கவிமாமணி குமரிச் செழியன்,
திருநெறிய தமிழ்மன்ற தலைவர் நடராஜன், ஐநி, மீண்டும் கவிக்கொண்டல் ஆசிரியர்
கலைமாமணி மா. செங்குட்டுவன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி வாழ்த்தினர்.
ஏற்புரை வழங்கிய துரை. சுந்தரராஜுலு தன் வாழ்க்கை உயர்வுதற்கு உந்து சக்தியாக
இருந்த பெரியவர்கள், உடன் பணியாற்றி நண்பர்கள், பழகிய அரசியல்வாதிகள்,
மருத்துவர்கள் ஆகியோரை நன்றியுடன் நினைவு கூர்ந்து நெகிழ்ச்சி உரையாற்றினார்.
பொருளாளர் ரங்கராஜன் நன்றி நவில நிகழ்ச்சி நிறைவடைந்தது.

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கச் செயலாளர் துரை. சுந்தரராஜுலு அவர்களின் 75-ஆவது
அகவை நிறைவு பவழ விழா 23.11.2014 அன்று அண்ணாநகர் கந்தசாமி நாயுடு
கல்லூரியில் அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத் தலைவர் புலவர் த. இராமலிங்கம்
தலைமையில் நடைபெற்றது. தலைமை உரையில் விழாநாயகர் துரை. சுந்தரராஜுலு
அவர்களின் நிர்வாகத் திறமை, அறிவாற்றல், பண்பு நலன்களை உளம் குளிரப்

பாரதியாரின் 133-ஆவது பிறந்தநாள் விழா

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சாரிபில், கந்தசாமி நாயுடு கல்லூரியில் 21.12.2014
அன்று காலையில் பாரதியாரின் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
விழாவிற்குத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர், தமிழ்ப் பணிச் செம்மல் புலவர். த.
இராமலிங்கம் தலைமை ஏற்றார்.
முனைவர் மா.கி. இரமணன் அவர்களின் மகள் திருமதி பாரதி தமிழ்த்தாய் வாழ்த்துப்
பாடினார். சங்கத்தின் செயலாளர் அரிமா. துரை. சுந்தரராஜுலு அவர்கள் இனியதொரு
வரவேற்புரை ஆற்றினார்.
தலைவர் அவர்கள், பாரதியாரின் தொலைநோக்குப் பார்வை – அறிவியல்
சிந்தனைகள் பற்றிக் குறிப்பிட்டுச் சிறந்ததொரு தலைமையுரை ஆற்றினார்.
முனவைர் மா.கி. இரமணன் அவர்களின் துணைவியார் திருமதி ரேவதி அவர்கள்
பாரதியாரைப் பற்றிச் சிறப்புரை ஆற்றினார். பின்னர் திருமந்திரத் திலகம் முனைவர்
மா.கி. இரமணன் அவர்கள் “என்றும் பாரதியார்” என்னும் தலைப்பில், பாரதியாரின்
பாட்டுத்திறன், விடுதலை வேட்கை பற்றி விரிவாக – நகைச்சுவை ததும்ப எடுத்துக்
கூறி அரியதொரு சிறப்புரை வழங்கினார்.
விழாவிற்குச் சங்க உறுப்பினர்களும், தமிழார்வலர்களும் பெருந்திரளாக வருகை தந்து
சிறப்பித்தனர்.
செயற்குழு உறுப்பினர் முனைவர் இ.ஜே. சுந்தர் அவர்கள் நன்றி நவில, நாட்டுப்
பண்ணுடன் கூட்டம் இனிது நிறைவெய்தியது.