நோக்கங்கள்

சங்கத்தின் நோக்கங்கள்:

1. அமிழ்தினும் இனிய தமிழ்மொழியை வளர்த்தல்.

2. திங்கள்தோறும் கூட்டம் நடத்தி, தமிழிலக்கியம், கலை, தமிழர் பண்பாடு, அறிவியல் முதலியவை பற்றிக் கருத்தாய்வு செய்தல்.

3. இந்த அமைப்பு அரசியல், சாதி, சமய சார்பற்றதாக விளங்கும்.

4. மக்களைத் தாய்மொழியின்மீது பற்றுக்கொள்ளச் செய்தல்

5. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவரல்லாத பிறமொழியாளர்களுக்குத் தமிழில் பேச, எழுத குறுகிய காலத்தில் பயிற்சி அளித்தல்

6. அயல் நாட்டினர் தமிழ்மொழியைக் கற்க விரும்பினால், அவர்களுக்குத் தமிழ்மொழியைக் கற்றுக் கொடுத்தல்; அதற்குரிய ஒளி,ஒலி குறுந்தகடுகளைத் தயாரித்து அனுப்புதல்.

7. தொடக்கப் பள்ளிமுதல் கல்லூரி வரையில் கல்வி பயிலும் மாணவ- மாணவிகள் கதை, கட்டுரை, கவிதை, கையெழுத்து, பேச்சு, ஒப்பித்தல், ஓவியம் முதலியவற்றில் சிறந்து விளங்கப் போட்டிகள் நடத்திப் பரிசு வழங்கல்.