முகப்பு

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கம் தோற்றம் வளர்ச்சியும்

 • அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கம் 1982 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
 • கடந்த 31 ஆண்டுகளாக மாதந்தோறும் இலக்கியக் கூட்டங்கள் தவறாமல் நடைபெற்று வருகின்றன.
 • சிறப்புக் கூட்டங்களில் இதய நோய் பற்றி, இதய நோய் நிபுணர் டாக்டர் தணிகாசலம், நீரிழிவு நோய் பற்றி டாக்டர் வே.ப. நாராயணன் அவர்களும் படங்களுடன் விரிவாக எடுத்துக் கூறினர்.
 • 1982- ஆம் ஆண்டு முதல் 2013- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை 265 கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.
 • தமிழக அமைச்சர்களும், நீதியரசர்களும், துணை வேந்தர்களும், மருத்துவர்களும் சங்க நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உரையாற்றி உள்ளனர்.
 • 11- ஆவது ஆண்டு விழாவிலும், 17-ஆவது ஆண்டு விழாவிலும் சிறப்பு மலர்கள் வெளியிடப்பட்டன.
 • தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பெரும் பேராசிரியர் ஔவை துரைசாமி பிள்ளை, வரலாற்றுப் பேராசிரியர் டாக்டர். மா. இராசமாணிக்கனார், செந்தமிழ்ச் சீயம் முனைவர் சி. இலக்குவனார் ஆகியோர்களின் நூற்றாண்டு விழாக்கள் சிறப்பாக நடைபெற்றன.
 • அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், அண்ணாநகர்த் தமிழ்ச் சங்க, கலைப் பண்பாட்டுச் சமுதாய அறக்கட்டளை 15-11-2010 அன்று தொடங்கப்பட்டது.
 • அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற விழாவில் திருவள்ளூர் பச்சையப்பன் அவர்களுக்கும், ஆதம்பாக்கம் தமிழறிஞர் என்.இ. இராமலிங்கம் அவர்களுக்கும், நற்றமிழ்க் கவிஞர் ந. பாபு அவர்களுக்கும் விருதும் ரூ.3000/- பண முடிப்பும் வழங்கப்பட்டன.
 • தமிழ்ச் சங்கத்திற்கென இணைய தளம் உருவாக்கப்பட்டு, அதன் வழியாகச் சங்க நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகள் உலகளாவிய தமிழர்களிடம் சென்றடைகின்றன.
 • உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கெனப் பேச்சுப் போட்டியும், கட்டுரைப் போட்டியும் , பாட்டுப் போட்டியும் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.