29.1.17 – “திருவள்ளுவர் திருநாள் – தமிழர் திருநாள் “

Untitled-2 copy

Untitled-1 copy

29.1.17 – “திருவள்ளுவர் திருநாள் – தமிழர் திருநாள் “

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
29.01.2017 அன்று நடைபெற்றக் கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 300-ஆவது மாதாந்திரக்
கூட்டம் 29.01.2017 அன்று சங்கத் துணைத் தலைவர் முனைவர்
அமுதா பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு
விருந்தினராக ஓய்வுபெற்ற தமிழாசிரியர் திரு. வெ.சேகர்
அவர்கள் “திருவள்ளுவர் திருநாள் – தமிழர் திருநாள்” என்னும்
தலைப்பில் சிறந்ததொரு உரையாற்றினார். தமிழர் திருநாள்
எவ்வாறு கொண்டாட வேண்டும் என அறிஞர்கள் கூடி முடிவு
செய்ததை நினைவு கூர்ந்தார். தமிழ் ஆண்டுகள் எவ்வாறு
பயன்பாட்டுக்கு வந்தது என்பதை ஆதாரத்துடன் எடுத்து
கூறினார்.
திருவள்ளுவர் காலத்தில் வாழ்ந்த பல புலவர்கள் குறித்தும்,
அவர்கள் இயற்றிய நூல்களைப் பற்றியும் தெளிவாக எடுத்து
கூறினார். அனைவரும் வியக்கத்தக்க வகையில் பல்வேறு
நூல்களில் இருந்து குறிப்புகள் தந்ததை அவையோரின்
பாராட்டுக்களையும் பெற்றார்.
துணைத் தலைவர் தனது முன்னுரையில் சிறப்பு விருந்தினரின்
சிறப்பியல்களை எடுத்தியம்பினார். தமிழர்களின் விழாக்களான
இரு விழாக்களைப் பற்றி தெளிவான தகவல்களை கூறினார்.
முன்னதாக செயலாளர் வரவேற்புரையாற்றினார். முனைவர்
பு.பெ. இராமசாமி அவர்கள் உறுப்பினர்களுக்கு வினா விடை
நிகழ்ச்சியினை வழக்கம்போல் நடத்தினார்.
பின்னர், செயற்குழு உறுப்பினர் கலியமூர்த்தி நன்றி கூற
கூட்டம் நிறைவடைந்தது.