26.06.2016 – ஐம்பெரும் விழா

Imperum Vizha 1

Imperum Vizha 2

Imperum Vizha text

26.06.2016 – ஐம்பெரும் விழா

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 26.06.2016 அன்று “ஐம்பெரும் விழா” நடைபெற்றது.

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் 31-ஆவது ஆண்டு விழா, அகவை 80-ஐ நிறைவு செய்த உறுப்பினர்களுக்ளுப் பாராட்டு, அகவை முதிர்ந்த 3
தமிழறிஞர்களுக்குப் பாராட்டு, விருது, பொற்கிழி வழங்குதல், கவிஞர் அமுதா பாலகிருஷ்ணன் முனைவர் பட்டம் பெற்றமைக்குப் பாராட்டு, பொதுத்
தேர்வில் தமிழ்ப் பாடத்தில் முதலிடம் பெற்ற சென்னைப் பள்ளி மாணவிகளுக்கு சான்றிதழும், ரொக்கப் பரிசும் வழங்கல் ஆகிய “ஐம்பெரும் விழா”
சங்கத் தலைவர் புலவர் த. இராமலிங்கம் அவர்கள் தலைமையில் 26.06.2016 அன்று நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர் மாண்புமிகு நீதியரசர் T.N. வள்ளிநாயகம் அவர்கள் அசுவை 80-ஐ நிறைவு செய்தவர்களைப் பாராட்டிப் பேசினார். அண்ணாநகர்த்
தமிழ்ச் சங்கத்துடன் தனக்குள்ள உறவைப் பற்றிக் குறிப்பிட்டார். ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டு வருவதை சுட்டிக்காட்டி அந்த முயற்சியில் தமிழ் அமைப்புகள் ஈடுபடவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அண்ணாநகர்த் தமிழ்ச்சங்க
உறுப்பினர்களைப் பாராட்டினார்.
தொடர்ந்து அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் முனைவர் கோ, பெரியண்ணன் அவர்கள் அகவை முதிர்ந்த தமிழர்களான சுவிஞர்
ஆலந்தூர் மோகனரங்கன் அவர்களுக்குப் பைந்தமிழ்ப் பாவலர் விருதும், புலவர் இரா.கு. இலக்குவன் அவர்களுக்கு ருறள்நெறிச் செம்மல் விருதும், பெ
சிவசுப்பிரமணியம் அவர்களுக்கு சிவநேயச் செம்மல் விருதும் வழங்கி தலா 3000 ரூபாய் ரொக்கப் பரிகம் வழங்கி அவர்களை பாராட்டினார்.
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் செயல்பாட்டினைக் குறித்து வெகுவாக பாராட்டினார். தமிழ்ச்சங்கங்களின் வளர்ச்சிக்கு அரசு பல்வேறு உதவிகளைச்
செய்து வருவதை எடுத்துச் சொல்லி அவைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறி அதற்கு தானும் உதவிட தயாராக இருப்பதாகவும்
குறிப்பிட்டார்.
சென்னைப் பல்கலைக்கழக தேர்வு ஆணையர் முனைவர் எஸ். திருமகன் அவர்கள் முனைவர் பட்டம் பெற்ற அமுதா பாலகிருஷ்ணன் அவர்களை
பாராட்டினார். தான் தமிழாசிரியராக தொடங்கி படிப்படியாக முன்னேறி தற்போது பல கல்லூரிகளுக்கு தேர்வு நடத்தும் அளவுக்கு உயர்ந்தது தமிழால்
மட்டுமே எனக் குறிப்பிட்டார். உலகில் பேச்சு வழக்கில் உள்ள மொழிகளில் தமிழ் 17-ஆவது இடத்தில் உள்ளது என்று பெருமிதத்தோடு கூறினார்.
தலைவர் அவர்கள் பேசுகையில் தமிழ்ச்சங்கத்தின் 30 ஆண்டு கால சாதனைகளை விரிவாக எடுத்துரைத்தார். விழாவில் கலந்து கொண்ட அனைத்து
விருந்தினர்களைக் குறித்து தனித்தனியாக குறிப்பிட்டு அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
திரு. தங்க காமராஜ் மேலும் பேசுகையில் அண்ணாநகர் என்றாலே நினைவுக்கு வருவது அண்ணாநகர் டவர் தான் நினைவுக்கு வரும். ஆனால்
இன்றைக்கு நினைவிற்கு வருவது அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கம் மட்டும் தான். இச் சங்கத்தை மையப்படுத்தி மற்ற தமிழ்ச்சங்கங்களை ஈரக்க வேண்டும்
எனக் கேட்டுக் கொண்டார்.
நிறைவாகப் பேசிய தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் தங்க, காமராஜ் அவர்கள், இந்த சான்றிதழும், ரொக்கப் பரிசும் கொடுப்பதற்கு சென்னைப்
பள்ளியைத் தேர்ந்தெடுத்த தமிழ்ச்சங்க நிர்வாகிகளைப் பாராட்டினார். கல்விக்காகவும் குறிப்பாகத் தமிழ் வளர்ச்சிக்காக அரசு செய்து வரும் சாதனைகளை
விரிவாக எடுத்துச் சொன்னார். வருங்கால இளைஞர்கள் தமிழ் படித்து வளரவேண்டும் என்று குறிப்பிட்டார். அண்மையில் பரோடா நகருக்கு செல்லும்
வாய்ப்பு கிடைத்தது என்றும், அங்கு பரோடோ வங்கி மேலாளர் வங்கி மேலாளர் வங்கி விளம்பரத்திற்காக 25 லட்சம் ரூபாய் செலவில் 4 இடங்களில்
விளம்பரப் பலகை வைக்கச் சொல்லி இருந்தாலும், ஒருசில நாட்களில் அவர் மாறுதல் செய்யப்பட்டு, அந்த இடத்தில் தமிழ்நாட்டின் குக் கிராமத்தில்
இருந்து ஒருவர் சேர்ந்துள்ளார், அவர் அந்த விளம்பர பலகை வைக்கும் ஆணையை ரத்து செய்து பதிலாக 2 ஆம்புலன்சு வண்டிகட்ள வாங்கி அதன்
இரண்டு பக்கங்களிலும் பரோடா வங்கிமின் விளம்பரங்களை எழுதி ஊர் முழுவதும் சுற்றிவரச் செய்துள்ளார். இதுதான் தமிழனுக்குக் கிடைத்த பெருமை
எனக் கூறினார். இவ்வாறு தமிழின் பெருமையை எடுத்து இயம்பினார்.
பின்னர் மாணவிகளுக்குப் பரிசுகள் மற்றும் சான்றிதழை வழங்கினார். மாணவிகளுக்கு சுரா பதிப்பகம் சார்பில் திருமதி பாரதிதேவி அவர்களால் நூல்கள்
வழங்கப்பட்டன. விருது பெற்றோர் சார்பில் கவிஞர் மோகனரங்கன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
முன்னதாக சங்கத்தின் செயலாளர் துரை. சுந்தரராசன் அனைவரையும் வரவேற்று பேசினார். பொருளாளர் திரு. ரெங்கராஜன் விழா சிறப்பாக நடைபெற
நன்கொடை அளித்த அனைவருக்கும் மற்றும் உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்தார். நண்பகல் உணவிற்குப் பின் நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன.