
19-06-2022-அன்று நடைபெற்ற 380-வது கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
19.06.2022 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்
அண்ணநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 380-ஆவது காணொலிக் கூட்டம்
19.06.2022 ஞாயிறு காலை 10.30 மணிக்கு புலவர் த. இராமலிங்கனார்
தலைமையில் கூடியது.
அரிமா முனைவர் த.கு. திவாகரன் தொடக்க உரை ஆற்ற, அரிமா முனைவர்
துரை. சுந்தரராஜுலு வரவேற்புரை ஆற்றினார். சிறப்புச் சொற்பொழிவாளர்
வழக்கறிஞர் பாடுமீன் சு. ஸ்ரீ கந்தராசா (ஆஸ்திரேலியா) அவர்களை
திரு. திவாகரன் அறிமுகம் செய்தார். சு. ஸ்ரீகந்தராசா அவர்கள் “கங்காரு
நாட்டில் கால்பதித்த தமிழர்கள்” என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
துரை, சுந்தரராஜூலு, புலவர் த. இராமலிங்னார், பாத்திமா மைந்தன்,
கௌரி சங்கர், தெர்மா டாக்டர் தண்டபாணி, சிவன் ஷான் (ஆஸ்திரேலியா),
இ.ஜெ. சுந்தர், சிவஞானம் (ஆஸ்திரேலியா), து.சீ. இராமலிங்கம்
ஆகியோர் சிறப்புரையாற்றிய திரு. சு. ஸ்ரீ கந்தராசா அவர்களைப்
பாராட்டியும் வாழ்த்தியும் பேசினர்.
திரு. சு. ஸ்ரீ கந்தராசா ஏற்புரை ஆற்றினார்.
பின்னர் “கண்டு சொல்-வென்று செல்” என்னும் நிகழ்ச்சி பேரா. பு.பெ.
இராமசாமி அவர்களால் நடத்தப்பட்டது.
பொருளாளர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.
