அண்ணாநகர் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் 18.05.2025 அன்று நடைபெற்றது


18.05.2025 அன்று நடைபெற்ற 418 ஆவது மாதாந்திரக் கூட்டம்
அண்ணாநகர் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் 18.05.2025 அன்று நடைபெற்றது

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் 418-ஆவது
மார்ச் மாத சிறப்பு நிகழ்ச்சி
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 418-ஆவது ஏப்ரல் மாத
நிகழ்ச்சியானது 18.05.2025 அன்று நடைபெற்றது. தமிழ்த்தாய்
வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் செயலாளர்
அரிமா துரை. சுந்தரராஜுலு, தலைமையேற்று
வரவேற்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் ‘அமெரிக்காவில் தமிழ்” என்னும் தலைப்பில்
பேராசிரியர் இ.ஜே. சுந்தர் சிறப்புரையாற்றினார்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனாரின் 92-ஆம் பிறந்தநாளை
முன்னிட்டு “காலமெல்லாம் கவிஞர்” என்னும் தலைவர்
பேராசிரியர் முனைவர் பெ.கி. பிரபாகரன் பேரூரை நிகழ்த்தினார்.
சங்கத்தின் பொருளாளர் கோ. ஞானப்பிரகாசம் நன்றியுரையாற்ற
நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
