அண்ணாநகர் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் 15.06.2025 அன்று நடைபெற்றது


15.06.2025 அன்று நடைபெற்ற 419 ஆவது மாதாந்திரக் கூட்டம்
அண்ணாநகர் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் 15.06.2025 அன்று நடைபெற்றது
அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின்
419-ஆவது மாத நிகழ்ச்சி
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 419-ஆவது மாத நிகழ்ச்சியானது
15.06.2025 அன்று நடைபெற்றது.
திருக்குறள் தூதுவர் திரு. சொ. பத்மநாபன் தமிழ் வாழ்த்துப் பாட,
அண்மையில் அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் உயிர் நீத்த
272 பேருக்கும் நிகழ்ச்சியில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
சங்கத்தின் செயலாளர் அரிமா துரை. சுந்தரராஜூலு
வரவேற்புரையாற்ற, சங்கத்தின் துணைத் தலைவர் முனைவர்
அமுதா பாலகிருஷ்ணன் தலைமையுரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியில், கவியரசர் கண்ணதாசன் 98-ஆம் பிறந்தநாளை
முன்னிட்டு “நான் நிரந்தரமானவன்” என்னும் தலைப்பில்
எழுத்தாளர் தேன்மொழி எத்துராசன் சிறப்புரையாற்றினார். இவர்
திராவிட இயக்கத்தின் புகழ்பெற்ற “தாடி’ எத்துராசன் அவர்களின்
புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து, ம.வே. மாணிக்கவாசகம் எழுதிய “வெளிச்ச வேர்கள்”
நூல் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. நூலினை கலைமாமணி
ஏர்வாடியார் அறிமுகம் செய்ய அரிமா த.கு. திவாகரன் முதற்
பிரதியினைப் பெற்றுக் கொண்டார். நூல் குறித்து கவிஞர் துருவன்
பேசினார். சோலை தமிழினியன் அறிமுகவுரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியின் நிறைவாக முனைவர் பி.பி. இராமசாமி அவர்கள்
கேள்வி நேரம் நடந்தேறியது.
சங்கத்தின் பொருளாளர் கோ. ஞானப்பிரகாசம் நன்றியுரையாற்ற
நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
