17.07.2016 – பாவேந்தரின் புரட்சிப் பார்வை


அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 17.07.2016 அன்று நடைபெற்ற கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 295-ஆவது மாதாந்திரக் கூட்டம் 17.07.2016 அன்று
தலைவர் புலவர் த. இராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. புலவர் தங்க. ஆறுமுகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு “பாவேந்தரின் புரட்சிப் பார்வை” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். பாவேந்தர் எழுதிய அழகின் சிறப்பு நூலில் இருந்தும் மற்ற நூல்களில் இருந்தும் பல்வேறு கருத்துக்களை எடுத்துக் கூறினார். சமுதாய சீர்திருத்தம், பெண்களி உரிமைகளை பாதுகாத்தல் போன்றவைகளுக்கு பாவேந்தர் ஆற்றிய பங்கு இவைகள் குறித்து விரிவாகவும், விளக்கமாகவும் உரையாற்றினார்.
தலைவர் புலவர் த. இராமலிங்கம் பேசுகையில், கனகசுப்புரத்தினம் என்ற பெயரை
பாரதிதாசன் என்று மாற்றியதைக் குறிப்பிட்டு இந்தச் சமுதாயம் சீர்பட தனது வாழ்நாள்
முழுவதையும் அர்பபணித்தார் என்பதை தெளிவாக கூறினார். பெண் கல்வி, பெண்
விடுதலை, கைம்பெண்கள் மறுமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் குறித்து
பேசினார்.
முன்னதாக சங்கச் செயலாளர் துரை. சுந்தரராசன் வரவேற்புரை ஆற்றினார். செயற்குழு உறுப்பினர் ச. கலியமூர்த்தி நன்றி கூறினார்.



