17-03-2019-அன்று நடைபெற்ற 326-வது கூட்டம்

17-03-2019-அன்று நடைபெற்ற 326-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
17.03.2019 அன்று நடைபெற்ற கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 326-ஆவது கூட்டம் 17.03.2019 அன்று
தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கம் அவர்கள் தலைமையில்
சிறப்பாக நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக முனைவர் கஸ்தூரி ராஜா அவர்கள் கலந்து கொண்டு
“உலகத் தாய்மொழிநாள், உலக மகளிர் தின நாள்” ஆகியவை குறித்து சிறப்பாக
உரை ஆற்றினார்
உலகில் 6800 மொழிகள் இருப்பதாகவும், அதிகம் பேசப்படும் மொழி ஸ்பானிஷ்
மொழி எனக் குறிப்பிட்டார். மற்ற நாடுகளில், அவரவர்கள் தாய்மொழியே ஆட்சி
மொழியாகவும் பயன்படுத்தபடுகிறது என்று கூறினார்.
162 நாடுகளில் தமிழ்மொழிப் பேசப்படுவதாக கூறினார். பெருஞ் சித்திரனர்
மொழிப் பற்றிச் சொன்னது, பாரதியார், பாரதிதாசன் ஆகியோரின் தமிழ்நடை,
மக்களின் மனதைப் பிரதிபலிக்கும் கண்ணாடி எனக் குறிப்பிட்டார்.
மார்ச் மாதம் 8-ஆம் நாள் கொண்டாடப்படும் உலக மகளிர் தினம் குறித்து
பல்வேறு அறிஞர்கள் போராடினார்கள்.1857-ஆம் ஆண்டு, ஜெர்மன் நாட்டின்
நிலக்கரிச் சுரங்கத்தில் பணியாற்றிய பெண்கள் 8 மணி நேர வேலைக்காக
போராடியது. 1921 மார்ச் 8-ஆம் தேதி முதல் கடைபிடிக்கப்படுகிறது. பெண்களுக்கு
சம உரிமை, கல்வி, சாதி, கலப்புத் திருமணம், கலித்தொகை, பாரதியார், பாரதிதாசன்
போன்றவர்கள் பெண் விடுதலை, வரதட்சணை ஒழிப்பு போன்றவைகளுக்கு
போராடியது போன்ற செய்திகளை கூறி, அவ்வையார் மணிமேகலை, காரைக்கால்
அம்மையார், ஆண்டாள் மற்றும் சங்ககால இலக்கியங்களில் இருந்து பல்வேறு
எடுத்துக் காட்டுகளை கூறினார்.
தலைவர் பேசுகையில், பெண்ணின் பெருமை குறித்து திரு.வி.க. கூறியதை
தெளிவாகக் கூறினார். பெரியார், அண்ணா போன்றவர்கள் பெண் விடுதலைக்குப்
பாடுபட்டதை சுட்டிக் காட்டினார்.
முன்னதாக செயலாளர் வரவேற்புரை ஆற்றி மார்ச் மாதம் பிறந்த நாள் கண்ட
உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
முனைவர் பு.பெ. இராமசாமி அவர்கள் வினாடி வினா நிகழ்ச்சி நடத்தி பரிசு
வழங்கினார்.
செயலாளர் நன்றி கூற, கூட்டம் நிறைவடைந்தது.